Raina: ‘தோனி இல்லைனா..நானும் விளையாடமாட்டேன்!’- ரெய்னா அதிரடி

தோனி- சுரேஷ் ரெய்னா

நாங்கள் இருவரும் 2008-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறோம்.

  • Share this:
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாட விரும்புகிறேன் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

    மகேந்திர சிங் தோனிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையேயான நட்பு பலரும் அறிந்ததே. சர்வதே கிரிக்கெட்டில் இருந்து தோனி தனது ஓய்வை அறிவித்ததும் ரெய்னாவும் இன்டர்நேஷ்னல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல மேட்ஸ் வின்னிங் கேம் ஆடியுள்ளனர். சென்னை ரசிகர்களுக்கு தோனி ‘தல’ என்றால் ரெய்னா ‘சின்ன தல’.

    ரெய்னாவின் கிரிக்கெட் ஃபார்ம் குறித்த கேள்விக்கு சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் தனது பேட்டிங் மூலம் பதிலளித்தார். இபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டியில் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளனர். அடுத்த ஐபிஎல் சீசனில் அணிகள் எந்த வீரரை தக்கவைக்கும். யார் விடுவிக்கப்படுவார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. அடுத்த தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்படவுள்ளது. தோனி சிஎஸ்கே அணிக்காக அடுத்தாண்டு விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில் தோனி ஆடவில்லை என்றால் நானும் ஆடமாட்டேன் என ஷாக்கான ஸ்டேட்மெண்டை ரெய்னா கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து பேசியுள்ள ரெய்னா, “ என்னால் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இன்னும் எஞ்சியுள்ளது. அடுத்த தொடரில் மேலும் 2 அணிகள் உதயமாகவுள்ளன. நான் சென்னை அணிக்காக மட்டுமே விளையாடுவேன். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன்.

    தோனி அடுத்த சீசனில் விளையாடவில்லை என்றால் நானும் விளையாடமாட்டேன். நாங்கள் இருவரும் 2008-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறோம். இந்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் நாங்கள் வென்றால் அடுத்தாண்டு தோனி விளையாட நான் அவரை சமாதானப்படுத்துவேன்’ எனக் கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: