SRHvsDC | ஜாலம் காட்டிய ரஷித்... சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

SRHvsDC

IPL 2020 | #SRHvsDC | வார்னர் 34 பந்துகளில் 66 ரன்களும், சஹா 45 பந்துகளில் 87 ரன்களும் விளாசி அவுட்டாகினர்.

  • Share this:
    டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல் 2020 தொடரில் 47-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டள்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டள்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருதமான் சஹா களமிறங்கினார்கள். இருவரும் இணைந்து டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

    வார்னர் 34 பந்துகளில் 66 ரன்களும், சஹா 45 பந்துகளில் 87 ரன்களும் விளாசி அவுட்டாகினர். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.

    இதை தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமலாய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். தவான் ரன் ஏதும் எடுக்காமலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 5 ரன்களிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

    சன்ரைசர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியாக டெல்லி அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசரஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.















    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published: