ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக சுனில் ஜோஷி நியமனம்…

பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக சுனில் ஜோஷி நியமனம்…

சுனில் ஜோஷியை வரவேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள புகைப்படம்

சுனில் ஜோஷியை வரவேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள புகைப்படம்

வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் சுனில் ஜோஷி முன்பு பணியாற்றியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பவுலர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பஞ்சாப் அணி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6ஆவது இடத்தை பிடித்திருந்தது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. பஞ்சாப் அணியின் கேப்டனாக மூத்த வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு கேப்டனாக இருந்த மயங்க் அகர்வால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக சுனில் ஜோஷி பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக இந்திய அணியின் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தார் சுனில் ஜோஷி. பஞ்சாப் கிங்ஸ் அணியில் முன்பு அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது அவருக்கு உதவியாளராக சுனில் ஜோஷி பணியாற்றினார். 2008, 2009 ஆம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரின்போது அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்தார்.

தற்போது பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக ட்ரீவர் பேய்லிஸ் உள்ளார். பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாபரும், பந்து வீச்சு பயிற்சியாளராக சாரி லாங்வெல்ட்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த பயிற்சியாளர் குழுவில் சுனில் ஜோஷியும் இணைந்திருக்கிறார்.

வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் சுனில் ஜோஷி முன்பு பணியாற்றியுள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான சுனில் ஜோஷி இந்திய அணிக்காக 15 டெஸ்ட், 69 ஒருநாள் போட்டிகளில் 1996-2001 ஆண்டுகளில் விளையாடி மொத்தம் 110 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

First published:

Tags: Cricket, IPL