அஸ்வின் அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கடும் விமர்சனங்கள் எழவே தன் ‘நண்பரும்’ ஆர்சிபி கேப்டனுமான விராட் கோலிக்கு ஆதரவாக தென் ஆப்பிரிக்கா லெஜண்ட் ஏ.பி.டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்சிபி வீரர் டிவில்லியர்ஸ் ட்விட்டரில் கேப்டன் கோலிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “டெஸ்ட் கிரிக்கெட் பார்வையாளர்கள், அணித் தேர்வு குறித்தும், பிற நான்சென்ஸ்க்ள் குறித்தும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். சவாலையும், அதில் காட்டப்படும் உணர்வையும், திறமையையும் நாட்டுப்பற்றையும் பாராட்டத் தொடங்குங்கள், உங்கள் கண்முன்னால் விரியும் இவற்றை விட்டு விடுகிறீர்கள், நல்ல ஆட்டத்தை இதன் மூலம் இழந்து விடுகிறீர்கள் என்று ட்வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
அதே வேளையில் ஓவல் டெஸ்ட்டில் வென்ற இந்திய அணியையும் விராட் கோலியையும் பாராட்டி அவர் கூறும்போது, “வெல் பிளேய்ட் இந்தியா, கோலி நன்றாக கேப்டன்சி செய்தீர்கள். சில தனி வீரர்களிடமிருந்து ஆச்சரியமிக்க திறமைகள் மற்றும் தைரியம். ரூட் நீங்களும் நன்றாக ஆடினீர்கள். நம் கிரிக்கெட்டுக்கு இது ஒரு நல்ல விளம்பரம். இறுதிப் போட்டிக்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்,
மான்செஸ்டரில் வெள்ளிக்கிழமையன்று 5வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது, இங்கிலாந்து அணிக்கு ஜாஸ் பட்லர் திரும்பியுள்ளார், இடது கை ஸ்பின்னர் ஜாக் லீச் வந்துள்ளார்.
இதையும் படிங்க: 5-வது டெஸ்ட்: இந்தியாவை தோற்கடிக்க அழைக்கப்பட்ட இங்கிலாந்து ஸ்பின்னர்
மான்செஸ்டரில் இந்தியா வென்றதில்லை, எனவே இந்த முறை அதையும் கோலி மாற்றியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தினால் இனி தொடரை வெல்ல முடியாது, இந்தியா வெல்லவே வாய்ப்பு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.