ஐபிஎல் 2022 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். சன் ரைசர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு ஏகப்பட்ட தடைகள் உள்ளன, இருப்பினும் மீதியிருக்கும் போட்டியில் கேன் வில்லியம்சன் ஆட மாட்டார், காரணம், தனது குழந்தை பிறப்பிற்காக அவர் நியூசிலாந்து சென்றுள்ளார்.
ஐபிஎல் 2022 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். சன் ரைசர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு ஏகப்பட்ட தடைகள் உள்ளன, இருப்பினும் மீதியிருக்கும் போட்டியில் கேன் வில்லியம்சன் ஆட மாட்டார், தனக்கு குழந்தை பிறக்கப்போகிற காரணத்தினால் அவர் நாடு திரும்பியுள்ளார்.
இதனை சன் ரைசர்ஸ் அணி தனது சமூக ஊடகத்தின் மூலம் உறுதிப்படுத்தியது. அந்த ட்வீட்டில், “எங்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் தனது குடும்பத்தில் புதிதாக இணைய இருக்கும் உறுப்பினருக்காக நியூசிலாந்திற்கு மீண்டும் பறக்கிறார். கேன் வில்லியம்சன் மனைவியின் சுகப்பிரசவத்துக்காகவும் பாதுகாப்புகாகவும் வாழ்த்துகிறோம்” என்று கூறியுள்ளனர்.
வான்கடேயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2022 தொடரின் 65வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மேலும் ஒரு உதையை வாங்கியது, ஆனால் இந்த முறை 194 ரன்கள் என்ற சன் ரைசர்ஸின் இலக்கை விரட்டி 190/7 என்று முடிந்து 3 ரன்களில் தோல்வி கண்டது. முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 193/6 என்று முடிய மும்பை அருமையாக சேஸ் செய்தது, ஆனால் கடைசியில் தேவையற்ற சிங்கிளுக்காக டிம் டேவிட் ஓட, டி.நடராஜன் அருமையாக சமயோசிதத்துடன் ரன் அவுட் செய்ய மும்பை வெற்றி கனவு தகர்ந்தது.
இந்த த்ரில் வெற்றி மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் -0.230 என்ற மைனஸ் நெட் ரன்ரேட்டில் 6 அணிகளுடன் 12 புள்ளிகள் வரிசையில் இணைந்தது. ப்ளே ஆஃபில் வெற்றி பெற அடுத்து ஞாயிறன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும், ஆனால் பெரிய வெற்றியை பெற்றால்தான் உண்டு. அப்படி பெற்றாலும் பிற போட்டிகளின் முடிவை நம்பி இருக்க வேண்டும், எனவே அதையெல்லாம் யோசித்தும் இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடர் இருப்பதை கவனத்தில் கொண்டும் கேன் வில்லியம்சன் நாடு திரும்பியுள்ளார்.
கேன் வில்லியம்சன் இந்த ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் பேட்டராகவும் சொதப்பியுள்ளார், அவர் 13 போட்டிகளில் வெறும் 216 ரன்களை 19 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் 93 தான். எனவே சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு அவரது கடைசி சீசனாகவும் இது அமைய வாய்ப்புள்ளது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.