விளையாட்டு

  • associate partner

RRvsSRH | மனிஷ் பாண்டே, விஜய் சங்கர் பொறுப்பான ஆட்டம்... சன்ரைசர்ஸ் அபார வெற்றி

IPL 2020 | மனிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் சிறப்பான் பார்ட்டனர்ஷிப் அமைத்து அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர்.

RRvsSRH | மனிஷ் பாண்டே, விஜய் சங்கர் பொறுப்பான ஆட்டம்... சன்ரைசர்ஸ் அபார வெற்றி
  • Share this:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மனிஷ் பாண்டே, விஜய் சங்கரின் பொறுப்பான ஆட்த்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் 2020 தொடரின் 40-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்தபோட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். ராபின் உத்தப்பா 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதன்பின் ஹைதராபாத் பந்துவீச்சில் ரன்குவிக்க முடியாமல் ராஜஸ்தான் அணி வீரர்கள் திணறினர். பென் ஸ்டோக்ஸ் 30 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 36 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.


ராஜஸ்தான் அணி இறுதி ஓவர்களிலும் அதிரடி காட்ட தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. ஆனால் தொடக்க வீரர்களாள கேப்டன் டேவிட் வார்னர் 4 ரன்களிலும், பேரிஸ்டோ 10 ரன்களிலும் அவுட்டாகினர். அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது.

ஆனால் மனிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் சிறப்பான் பார்ட்டனர்ஷிப் அமைத்து அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர். ஒரு புறம் மனிஷ் பாண்டே அதிரடியாக விளையாட மறுபுறம் விஜய் சங்கர் நிதனமாக விளையாடி ரன்குவித்தனர். இறுதியாக ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மனிஷ் பாண்டே 83 ரன்களுடனும், விஜய் சங்கர் 52 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading