ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

SRH vs RR IPL 2021: உடைக்க முடியாத ஜேசன் ராய், வில்லியம்சனின் மாறுபட்ட பேட்டிங்... இப்படித்தான் ஆடணும் சஞ்சு

SRH vs RR IPL 2021: உடைக்க முடியாத ஜேசன் ராய், வில்லியம்சனின் மாறுபட்ட பேட்டிங்... இப்படித்தான் ஆடணும் சஞ்சு

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

ஐபிஎல் 2021 தொடரின் 40வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிர்ச்சி அளித்து அபார வெற்றி பெற்றது. வார்னரின் எதிர்காலம் கேள்விக்குறியான இந்தப் போட்டியில் ஜேசன் ராய், கேன் வில்லியம்சனின் நேர் எதிர் அணுகுமுறையை ராயல்ஸினால் உடைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஐபிஎல் 2021 தொடரின் 40வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிர்ச்சி அளித்து அபார வெற்றி பெற்றது. வார்னரின் எதிர்காலம் கேள்விக்குறியான இந்தப் போட்டியில் ஜேசன் ராய், கேன் வில்லியம்சனின் நேர் எதிர் அணுகுமுறையை ராயல்ஸினால் உடைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

சஞ்சு சாம்சனின் முதிர்ச்சி

அதே போல் முன் வரிசையில் இறங்கி டெய்ல் எண்டர் போல் ஆடிய சஞ்சு சாம்சன் முதிர்ச்சியடைந்துள்ளார், டைமிங், பிளேஸ்மெண்ட் என்று தன் பேட்டிங் ஸ்டைலை மாற்றிய போது அவரால் விரைவில் ரன்களை எடுக்க முடிவதோடு கடைசி வரை நிற்கவும் முடிகிறது என்பதை அவர் புரிந்து கொண்டார், இந்த முதிர்ச்சியைக் காட்டினால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும் என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளார். சஞ்சு சாம்சனின் 57 பந்து 82 ரன்கள் 7 பவுண்டரி 3 சிக்சர்கள் என்பது இந்த ஐபிஎல் தொடரில் கேப்டன் ஒருவர் ஆடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்றுதான் கூற வேண்டும்.

புவனேஷ்வர் குமாரின் டெத் பவுலிங் மேதைமை

சாம்சன் கிரீசில் இருக்கிறார், ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி 3 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்தா 180 ரன்களை எட்டியிருக்கலாம், ஆனால் புவனேஷ்வர் குமார் அங்குதான் சன் ரைசர்ஸ் அணியின் சொத்தாகத் திகழ்கிறார். இவர் 17,19ம் ஓவர்களை வீசினார். யார்க்கர்களை துல்லியமாக வீசினார். விக்கெட் மெய்டனுடன் முதலில் அசத்திய புவனேஷ்வர் குமார் டெத் பவுலிங்கில் மாஸ்டராகத் திகழ்கிறார். 4 ஓவர் 28 ரன் ஒரு விக்கெட். இவரைப்பார்த்து சித்தார்த் கவுலும் கடைசி ஓவரை சிறப்பாக வீச இலக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

ஜேசன் ராய், கேன் வில்லியம்சன் மாறுபட்ட அணுகுமுறை:

ஜேசன் ராய் தன் முதல் அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே தன் பவரைக் காட்டினார், இவரது பவுண்டரி ஹிட்டிங் ஸ்டைலும் கேன் வில்லியம்சனின் நளினமான உத்தியும் கலந்த தருணத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சினால் இந்த இரண்டு பேரையும் உடைக்க முடியவில்லை. 42 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 60 ரன்களை எடுத்து ஜேசன் ராய் ஒரு புறம் அசத்த கேன் வில்லியம்சன் 41 பந்துகளில் 5 பவுண்டரி 1சிக்சருடன் 51 நாட் அவுட் என்று அனாயசமாக இலக்கை விரட்டினர்.

கிறிஸ் மோரிஸ் லெந்த் ஜேசன் ராய்க்கு வாகாக அமைந்தன. 5வது ஓவரில் ஒரு லெக் பை பவுண்டரி உட்பட 4 பவுண்டரிகள் வந்தன. முக்கியமாக ராகுல் திவேத்தியாவை அட்டாக்கிலிருந்து தூக்க வைத்தவர் ஜேசன் ராய், அவரை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசினார் ஜேசன் ராய். இதன் மூலம் ஓவருக்கு 6 ரன்கள் என்று வெற்றி இலக்கு விகிதம் மாறியது.

Also Read: ஜேசன்ராய், வில்லியம்சன் சிறப்பான ஆட்டம்- நீண்ட நாளுக்குப் பிறகு வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

தொடக்கத்தில் விருத்திமான் சஹா மிகச்சரியான ஒரு பவர் ப்ளே வீரராக 18 ரன்கள் எடுக்க முடிவில் வில்லியம்சனுடன் ஆடிய அபிஷேக் சர்மா சரியாக முடித்து வைக்க சன் ரைசர்ஸ் அணி 10 மேட்சில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் எடுத்துள்ளது, இனி வரும் அனைத்துப் போட்டிகளையும் வென்றால் சன் ரைசர்ஸ் அணிக்கு ஒரு அரிதான பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது போல்தான் தெரிகிறது.

First published:

Tags: IPL 2021, News On Instagram