முகப்பு /செய்தி /விளையாட்டு / ஜேசன்ராய், வில்லியம்சன் சிறப்பான ஆட்டம்- நீண்ட நாளுக்குப் பிறகு வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ஜேசன்ராய், வில்லியம்சன் சிறப்பான ஆட்டம்- நீண்ட நாளுக்குப் பிறகு வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

வில்லியம்சன்

வில்லியம்சன்

ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐ.பி.எல் தொடரின் 40-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். லீவிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து, கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.

நிதானமாக ஆடி ரன்களைச் சேர்ந்த ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடிய சாம்சன் 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆட்டநேர இறுதியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், விர்த்திமான் சஹா களமிறங்கினர். சஹா 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதனையடுத்து, கேப்டன் கேல்வில்லியம்சன் களமிறங்கினார். வில்லியம்சன், ஜேசன் ராய் இணை நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தது. ஜேசன் ராய் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கார்க் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய வில்லியம்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

ஆட்டநேர இறுதியில் ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில்லியம்சன் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தத் தொடரில் ஹைதராபாத் அணி இது இரண்டாவது வெற்றியாகும். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் 4-வது இடத்துக்கு முன்னேறியிருக்கலாம். ஆனால், தோல்வியடைந்ததன் மூலம் 6 இடத்தில் உள்ளது.

First published:

Tags: IPL 2021