மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று கடைசி லீக் ஆட்டத்தில் 235 ரன்கள் குவித்து போட்டியை வென்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியது. கடந்த ஐபிஎல் சாம்பியன் வெளியேறியது மும்பை ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
இந்நிலையில் மும்பை போன்ற பிரான்சைஸீக்கு ஆடுவது என்றால் சாதாரணமல்ல என்று நிர்வாகம் பற்றி ஒரு கருத்தை ரோகித் சர்மா வெளியிட்டுள்ளார். அதாவது பிரஷர் தான் என்று கூறாமல் பிரஷரையே வேறொரு வார்த்தையில் சமத்காரமாக ‘எதிர்பார்ப்பு’ அதிகம் என்று சொல் மாற்றம் செய்து கூறினாலும் மும்பை பிரான்சைஸீக்கு ஆடுவது பிரஷர் தான் என்பதை சூசகமாகவே தெரிவித்ததாக நமக்குப் படுகிறது.
மேலும் பிரான்சைஸீயை நினைத்து பெருமைப்படுகிறோம், என்ன உருவாக்கி வைத்துள்ளோமோ அதை நினைத்து சந்தோஷப்படுகிறோம் என்ற ரீதியில் ரோகித் சர்மா பேசியிருப்பது, அடுத்த ஏலத்தில் ஒருவேளை அணி மாறுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஷர் என்கிறார். அதை வேறு வார்த்தையில் இடக்கரடக்கலாகப் பயன்படுத்தினாலும் பிரஷர் என்பதை சூசகமாகத் தெரிவித்து விட்டார் ரோகித் சர்மா.
“மும்பை போன்ற பிரான்சைஸீக்கு ஆடும்போது எப்போதும் நன்றாக ஆடித்தீர வேண்டும், இதை நான் பிரஷர் - அழுத்தம் என்று கூற மாட்டேன். அனைத்திற்கும் மேலாக எதிர்பார்ப்பு என்றே கூறுவேன். கடந்த 5-6 ஆண்டுகளாக ஒரு குழுவாக உருவாக்கிய விஷயம் அபாரமானது. சில வீரர்களை ட்ராப் செய்வது கடினம். இந்த சீசனில் தொடக்கத்தில் நன்றாக ஆடினோம், வெற்றிகளைப் பெற்றோம்.
பிறகு இடைவெளி ஏற்பட்டது. யுஏஇ வந்த பிறகு அணியாகத் தோல்வி அடைந்தோம். ஆனால் இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்தையும் கொடுத்தோம் இன்று, மும்பை இண்டியன்ஸ் ரசிகர்கள் குஷியாகியிருப்பார்கள், மிகவும் கேளிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ரசிகர்கள் எங்கள் அணியின் 12வது வீரர் ஆவார்கள், எப்போதும் எங்கள் அணிக்குத் துணையாக நின்றார்கள், பிளே ஆஃப் செல்லாதது சிறிய ஏமாற்றம்தான்.
இஷான் கிஷன் திறமை அசாத்தியமானது. அவரை எந்த டவுனில் இறக்க வேண்டும் என்பது முக்கியம். ” இவ்வாறு கூறினார் ரோகித் சர்மா. அடுத்த ஆண்டின் பெரிய ஏலத்தில் சிலபல தலைகள் அணி மாறும் என்றே தெரிகிறது.
ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2021, Rohit sharma