முகப்பு /செய்தி /விளையாட்டு / நேரா கால்ல வாங்கிட்டு ஏம்ப்பா ரிவியூ செஞ்ச?- கேதார் ஜாதவை கேலி செய்த பிரையன் லாரா

நேரா கால்ல வாங்கிட்டு ஏம்ப்பா ரிவியூ செஞ்ச?- கேதார் ஜாதவை கேலி செய்த பிரையன் லாரா

கேதார் ஜாதவ் எல்.பி.டபிள்யூ.

கேதார் ஜாதவ் எல்.பி.டபிள்யூ.

கேதார் ஜாதவ் பிளம்ப் ஆக வாங்கி விட்டு எல்.பி ஆகி ரிவியூ செய்தாரே பார்க்கலாம் லாரா அதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விட்டார், எதற்காகப்பா அந்த ரிவியூ? என்று கிண்டல் கலந்த தொனியில் பேசினார் பிரையன் லாரா.

  • 1-MIN READ
  • Last Updated :

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக பயங்கர வேகப்பந்து வீச்சில் திணறிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கில் சொதப்பி 134 ரன்களில் மடங்கியது. கேதார் ஜாதவ் பிளம்ப் ஆக வாங்கி விட்டு எல்.பி ஆகி ரிவியூ செய்தாரே பார்க்கலாம் லாரா அதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விட்டார், எதற்காகப்பா அந்த ரிவியூ? என்று கிண்டல் கலந்த தொனியில் பேசினார் பிரையன் லாரா.

ஆன்ரிச் நார்ட்யே பயங்கரமாக வீசினார், 150 கிமீ வேகத்தில் அவர் வீசியதையத்து டேவிட் வார்னர் 3 பந்துகள் ஆடி டக் அவுட் ஆகி வெளியேறினார், சகாவும் இவரது வேகத்தில் காலியானார், பின்னால் கேதார் ஜாதவும் வேகத்தில் எல்.பி.ஆனார். அது லைவிலேயே பிளம்ப் எல்.பி.என்று தெரிந்தது. ஆனால் கேதார் ஜாதவ் அதை ரிவியூ செய்தார். ரிவியூ கேட்கும் முன்பு அவர் எதிர்முனை வீரரையும் கலந்தாலோசித்தார்.

இந்த முடிவு வர்ணனையில் இருந்த பிரையன் லாராவை ஆச்சரியப்படுத்தியது, “தென் ஆப்பிரிக்காவுக்காக ஆடும் வீரர்கள் நார்ட்யே, ரபாடா. ஐபிஎல் தொடருக்கு இவர்கள் நல்ல வடிவத்தில் வந்துள்ளனர். மிகவும் கூர்மையான பவுலர்கள், மேலும் நார்ட்யே போன்றவர்கள் வேகமாக நேராக வீசக்கூடியவர்கள். நமக்கு இடமே கொடுக்க மாட்டார்கள். கேதார் ஜாதவுக்கு வீசிய பந்து நேர் வேகப்பந்து , அது பிளம்ப் எல்.பி.

அதை போய் அவர் ஏன் ரிவியூ செய்தார்? ரிவியூவிற்கான தேவை என்ன? இதைப்போய் ரெஃபர் செய்ததை என்னால் நம்ப முடியவில்லை. நாங்கள் யாருமே நம்பவில்லை, அவர் என்ன செய்கிறார் என்பது போல் தான் பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று லாரா சரமாரியாகப் பேசினார்.

இந்தத் தோல்வியினால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆப் வாய்ப்பை மேலும் கடினமாக்கிக் கொண்டது அட்டவணையில் கடைசியில் உள்ளது. 8 மேட்சில் ஒரே ஒரு வெற்றியைத்தான் சன்ரைசர்ஸ் பெற்றுள்ளது. இந்நிலையில் பிளே ஆஃப் கதவு மூடப்பட்டது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: IPL 2021, Kedar Jadhav