• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • சிஎஸ்கே அணிக்கு ஐதராபாத் அணிக்கெதிரான இன்றைய போட்டி ஏன் முக்கியம்? - ஐபிஎல் சுவாரஸ்யம்

சிஎஸ்கே அணிக்கு ஐதராபாத் அணிக்கெதிரான இன்றைய போட்டி ஏன் முக்கியம்? - ஐபிஎல் சுவாரஸ்யம்

CSK Team and Dhoni

CSK Team and Dhoni

கேப்டன் தோனியிடம் இருந்து ஒரு வெறித்தனமான பேட்டிங்கைதான் சி.எஸ்.கே. ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 • Share this:
  ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அணியும், கடைசி இடத்தில் உள்ள அணியும் தான் இன்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அந்த அணிகள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்...

  ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா மைதானத்தில் தான் நடப்பு ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டி நடைபெற உள்ளது. இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில், முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில், சென்னை அணி கடைசி பந்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி சென்னை அணியின் வலுவான பேட்டிங் வரிசையை பறைசாற்றுவதற்கு சிறந்த உதாரணமாக அமைந்தது.

  அணியின் கேப்டன் தோனியிடம் இருந்து ஒரு வெறித்தனமான பேட்டிங்கைதான் சி.எஸ்.கே. ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பார்மில் இருக்கும் பிராவோவிற்கு பதிலாக கடந்த போட்டியில் களமிறக்கப்பட்ட சாம் கர்ரன் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் பிராவோ மீண்டும் ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்புள்ளது. இது தவிர்த்து வேறு எந்த மாற்றமும் சென்னை அணியில் நிகழ வாய்ப்புகள் குறைவுதான்.

  CSK


  16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறலாம் என்பதால் இந்தப் போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

  Also Read:  RCB vs RR: ஐபிஎல் வாழ்வா சாவா ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு வில்லனாக மாறிய பெங்களூரு!

  ஐதராபாத் அணியில் என்ன மாற்றம்?

  ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றியை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இனிவரும் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என்பதை சூசகமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  sunrisers hyderabad


  கடந்த போட்டியில் இந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஜேசன் ராய், இனிவரும் போட்டிகளிலும் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் ஆட்டம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. அதே எழுச்சியை இன்றைய போட்டியிலும் காட்டும் பட்சத்தில், சென்னை அணிக்கு கட்டாயமாக இவர்களால் நெருக்கடி தர முடியும்.

  இந்த அணியை பொறுத்தவரை அதன் பலமே கேப்டன் கேன் வில்லியம்சன் தான். இதனால் அவரது விக்கெட்டை வீழ்த்த சென்னை அணி அதீத முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. புவனேஸ்வர் குமார், ஜேசன் ஹோல்டர், சந்தீப் ஷர்மா, ரஷித் கான் ஆகியோர் பந்துவீச்சில் எதிரணியை அச்சுறுத்த காத்திருக்கின்றனர்.

  இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியதில் 11 வெற்றிகளுடன் சென்னை அணியின் கையே ஓங்கியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Arun
  First published: