ஐபிஎல் 2021 தொடரிலிருந்து நடராஜன் விலகல் - தகவல்

ஐபிஎல் 2021 தொடரிலிருந்து நடராஜன் விலகல் - தகவல்

நடராஜன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் காயம் காரணமாக நடப்பு தொடரிலிருந்து விலக நேரிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 • Share this:
  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்த நடராஜன் முழங்கால் காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடமல் இருந்தார். அவருக்கு பதிலாக கலீல் அஹமது அணியில் சேர்க்கப்பட்டார். நடராஜன் அணிக்கு எப்போது திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் முழுவதும் விளையாடமாட்டார் என்று கிரிக்இன்ஃபோ தகவல் வெளியிட்டுள்ளது.

  இது தொடர்பாக கிரிக்இன்ஃபோ வெளியிட்டுள்ள தகவலில், ஆஸ்திரேலிய சுற்றுப்பணத்திற்கு பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் நடராஜன் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். நடராஜனின் உடல்நிலையை கிரிக்கெட் அகடாமி மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
  ஹைதராபாத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் நடராஜன் விளையாடி இருந்தார். அதற்குபின் அவர் விளையாடவில்லை.

  நடராஜன் உடல்நிலை குறித்த முழு அறிக்கை எங்களுக்கு கிடைக்கவில்லை. காயம் சற்று பெரிதாக இருந்தால் அவரை ஹைதராபாத் அணியிலிருந்து விடுவிக்க அணி நிர்வாகத்திடம் பிசிசிஐ முறையிடும். நடராஜன் மீண்டும் தேசிய கிரிக்கெட் அகடாமியில் தனது உடல்தகுதியை நிருப்பிக்க வேண்டியிருக்கும் என்று கிரிக்கெட் அகாடமி நிர்வாகி தெரிவித்துள்ளார் என்றும் கிரிக்இன்ஃபோ தெரிவித்துள்ளது.

  நடராஜன் உடல்நிலை குறித்து அந்த அணயின் கே்ப்டன் வார்னர் கூறுகையில், முழங்கால் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளிலும் நடராஜன் ஆட மாட்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்தால் அவர் 7 நாட்களுக்கு உட்காரத்தான் வேண்டும். பிறகு குவாரண்டைனுக்குத் திரும்ப வேண்டும். இப்போதைக்கு அவரது உடல் தகுதியை நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். உடற்கூறு மருத்துவர்கள் அவர் முழங்காலை நன்றாக ஆய்வு செய்கின்றனர், ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ஸ்கேன் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் நடராஜன் காயம் காரணமாக ஐ.பி.எல் 2021 தொடரிலிருந்து விலகுவதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.
  Published by:Vijay R
  First published: