• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஹைதராபாத் ரன் சேர்க்க முடியாமல் திணறல்... சிஎஸ்கே அணிக்கு எளிய இலக்கு

ஹைதராபாத் ரன் சேர்க்க முடியாமல் திணறல்... சிஎஸ்கே அணிக்கு எளிய இலக்கு

CSK vs SRH

CSK vs SRH

CSK vs SRH | சென்னை அணி ஒரே ஒரு வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும்.

  • Share this:
    சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஹைதராபாத் அணி 7 விக்கெட்களை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

    ஐபிஎல் 2021 தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் சார்ஜா மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே-வில் சாம் குரணுக்கு பதிலாக டூவைன் பிராவோ அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். சென்னை அணி ஒரே ஒரு வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். அதே சமயம் சன்ரைசர்ஸ் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்றையப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

    இதையடுத்து பேட்டிங்கை ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜோசன் ராய் 2 ரன்னில் ஹேசில்வுட் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த வந்த கேப்டன் வில்லியம்சன் 11 ரன்களில் பிராவோ பந்துவீச்சில் சிக்கினார்.

    சிஎஸ்கேவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் ரன் எடுக்க தவறினார்கள். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத் அணி சார்பில் அதிபட்சமாக தொடக்க வீரர் விருதமான் சஹா 44 ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் ஹேசில்வுட் 3 விக்கெட்களையும், பிராவோ 2 விக்கெட்களையும், ஜடேஜா மற்றும் சர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.

    இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: