முகப்பு /செய்தி /விளையாட்டு / சிஎஸ்கே தொடர்பான பதிவுகளை நீக்கிய ரவீந்திர ஜடேஜா- விலகுகிறாரா?- ரசிகர்கள் கேள்வி

சிஎஸ்கே தொடர்பான பதிவுகளை நீக்கிய ரவீந்திர ஜடேஜா- விலகுகிறாரா?- ரசிகர்கள் கேள்வி

தோனி - ஜடேஜா

தோனி - ஜடேஜா

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்திலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான பதிவுகளை நீக்கியுள்ளமை ரசிகர்களின் ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்திலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான பதிவுகளை நீக்கியுள்ளமை ரசிகர்களின் ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அதாவது 2012 முதல் சிஎஸ்கே அணிக்கு ஆடிவருகிறார் ரவீந்திர ஜடேஜா, ஆனால் 2022 ஐபிஎல் தொடரில் அவரை கேப்டனாக்கி பிறகு தோல்விகளினால் அவரை நீக்கி, ரசிகர்கள் மத்தியில் அவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து கசப்புடனும் காயத்தினாலும் வெளியேறினார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் பத்திரிகையாளர் ஒருவர் சிஎஸ்கே பற்றி கேட்ட போது, சார், இந்தியாவுக்காக ஆடிக்கொண்டிருக்கிறேன் இதைப்பற்றி கேளுங்கள் என்று நாசுக்காக அவரை மறித்தார். தோனி வேண்டுமென்றே ஜடேஜாவிடம் கேப்டன்சியைக் கொடுத்து விட்டு பிறகு மீண்டும் அதை தானே பெற்று நாடகமாடி விட்டார் என்ற விமர்சனங்களும் ரசிகர்கள் மத்தியில் அப்போது எழுந்தது நினைவிருக்கலாம்.

அதாவது டாஸிற்கு மட்டுமே ஒருவர் கேப்டனாக இருந்தால் கடைசியில் ஒருவருக்கு பணி திருப்தி இருக்காது என்றெல்லாம் சிஎஸ்கே தரப்பிலிருந்து பேசப்பட்டதும் நினைவிருக்கலாம். இதனாலெல்லாம் ஜடேஜா இனி சிஎஸ்கேவுக்கு ஆட மாட்டார் என்ற வதந்திகள் அப்போது பரவின, அதை சிஎஸ்கே நிர்வாகம் தொடர்ந்து மறுத்தும் வந்தது.

ஆனால் ஜடேஜாவின் இப்போதைய செயல், அதாவது, இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து சிஎஸ்கே தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியிருப்பது அவர் இனி சிஎஸ்கேவுக்கு ஆடமாட்டார் என்ற வதந்திகளை மீண்டும் உயிர்ப்பித்துள்ளன.

ரசிகர்கள் பலர் தங்கள் வலைப்பக்கத்தில், ‘என்னவோ அங்கு சரியில்லை, ஜடேஜ தோனி பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை, சிஎஸ்கே தொடர்பான பதிவுகள் அனைத்தையும் நீக்கிவிட்டார் ஜடேஜா’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: CSK, Dhoni, IPL, IPL 2022, Ravindra jadeja