• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • DC vs KKR | நீ அவுட் இல்லப்பா.. சோகமாக வெளியேறி சந்தோஷமா மீண்டும் களத்துக்கு வந்த ஹெட்மயர்!

DC vs KKR | நீ அவுட் இல்லப்பா.. சோகமாக வெளியேறி சந்தோஷமா மீண்டும் களத்துக்கு வந்த ஹெட்மயர்!

Shimron hetmyer

Shimron hetmyer

17வது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசிய நிலையில் அந்த ஓவரில் 4வது பந்தில் மிகவும் சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.

  • Share this:
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக நடைபெற்று வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இடையேயான போட்டியில் ரசிகர்களை கவர்ந்த சுவாரயஸ்மான விஷயம் ஒன்று அரங்கேறியிருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கன், பந்து வீச முடிவு செய்தார். அதன்படி, முதலில் இன்னிங்ஸை தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் பெரிய ஸ்கோரை குவிக்க முடியாமல் தத்தளித்தது.

அந்த அணி 5வது ஓவரில் 32 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. ஓப்பனர் பிரித்வி ஷா 18 ரன்களுக்கு நடையைக் கட்டினார். மார்கஸ் ஸ்டோய்னிஸும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு ஆடிய ஷிகர் தவான் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் வெளியேறிய அடுத்த ஓவரில் ரிஷப் பந்தும் ஆட்டமிழந்தார்.

Also Read:    அக்ஸர் பட்டேல் நீக்கம்.. சென்னை வீரர் சேர்ப்பு.. உலக கோப்பை இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்த பிசிசிஐ!

டெல்லி அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருடன், ஷிம்ரோன் ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடவேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில் அதிக ரன்ரேட்டை பராமரித்து வரும் ஹெட்மயர் மீது அதிக எதிர்பார்த்து ஏற்பட்டது. அவர் பெரிய ஸ்கோர் எடுத்தால் மட்டுமே டெல்லி அணியால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும் என்ற நிலை இருந்தது. அப்போது 16 ஓவர்களுக்கு டெல்லி அணி 4 விக்கெட்டை இழந்து 92 ரன் மட்டுமே எடுத்திருந்தது.

17வது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசிய நிலையில் அந்த ஓவரில் 4வது பந்தில் மிகவும் சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. 4 ஓவரை ஹெட்மயர் தூக்கி லாங் ஆன் திசையில் தூக்கி அடித்த போது சுப்மன் கில் அருமையாக பந்தை தாவி பிடித்து கேட்ச் செய்தார். இதனையடுத்து ஹெட்மயர் சோகத்துடன் களத்தை விட்டு வெளியேறினார். அடுத்த ஆட்டக்காரராக அக்ஸர் பட்டேல் கிரீஸுக்கு வந்தார்.

Also Read: ஜாதகம் அடிப்படையில் மாணவர் சேர்க்கை.. அரியவகை பள்ளி.. வித்தியாசமான கற்பித்தல் முறை!

அப்போது அந்த பந்து நோ பாலாக இருக்குமோ என்பதனை மூன்றாவது நடுவர் சரிபார்த்த போது, பந்துவீச்சாளர் காலை அகற்றி வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பந்து நோபால் என அறிவிக்கப்பட களத்தில் இருந்த அக்ஸர் பட்டேல் மீண்டும் வெளியேறினார். அப்போது களத்திற்கு வெளியே இருந்த ஹெட்மயர் துள்ளிக் குதித்து மீண்டும் கிரீஸுக்கு வந்தார்.

பின்னர் வந்த வேகக்த்தில் 18வது ஓவரில் அருமையாக இரண்டு சிக்ஸர்களை விளாசிவிட்டு அடுத்த ஓவரிலேயே ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஹெட்மயர் 10 பந்துகளுக்கு 17 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

Also Read: ஆன்லைன் கல்வியில் 522 மணி நேரங்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 135 ரன்களை எடுத்துள்ளது. கடைசி பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் பரபரப்பான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 136 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப்போவது யார் என்ற உச்சகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: