ஐபிஎல் 2022 ஏலத்தில் தலையாய வீரர்கள் குழுவில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படும் வீரராக இருப்பார் என்று முன்னாள் வீரரும் தற்போதைய திறனாய்வாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கவுள்ளதாக யாரோ ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். விராட் கோலி கடந்த சீசனுக்குப் பிறகு பதவி விலக முடிவு செய்ததால், புதிய கேப்டனைத் தேடி ஆர்சிபி ஈடுபட்டுள்ளது. ஏலத்திற்கு முன்னதாக கோலி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை அந்த அணி தக்கவைத்துள்ளது.
ஐயர் கடந்த காலங்களில் டெல்லி கேப்பிடல்ஸை வழிநடத்தினார், 2020 இல் அவர்களின் முதல் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அந்த அணியைஅழைத்துச் சென்றார். கடந்த சீசனில் அவர் காயத்தால் பாதிக்கப்பட்டார், முதல் லெக் ஆரம்பத்தில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார், இருப்பினும், அவர் இரண்டாவது லெக்கில் குணமடைந்து திரும்பினார். ஐயர் திரும்பினாலும் ரிஷப் பன்ட்டைக் கேப்டனாக தொடர டெல்லி கேப்பிடல்ஸ் முடிவு செய்தது.
இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது: “இப்போது இஷான் கிஷான் விடுபட்டுள்ளார், அதாவது இஷான் கிஷனுக்கு பணம் சேமிக்கப்படும், மேலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிக ஏலம் விடப்படும். அது 15-16 கோடியாக இருக்கலாம், ஸ்ரேயாஸ் ஐயருக்கு RCB 20 கோடி வைத்துள்ளதாக ஒருவர் என்னிடம் கூறினார்.
ஷ்ரேயாஸ் ஐயர் KKR அல்லது RCB இன் கேப்டனாக இருக்கலாம். பஞ்சாப் ஸ்ரேயஸ் அய்யருக்காக போட்டியிடும் என்று நான் நினைக்கவில்லை. மிகவும் விலையுயர்ந்த வீரர் ஸ்ரேயாஸ் ஐயராகவே இருப்பார். இந்த பட்டியலில், இஷான் கிஷான் இல்லாததால், அதிக விலை வீரராக ஸ்ரேயஸ் ஐயர் இருப்பார். இஷான் கிஷன் இருந்திருந்தால், ஒரு இழுபறி நடந்திருக்கலாம். இப்போது, இஷானுக்காக பணத்தை ஒதுக்குவார்கள், ஐயருக்கு பணம் வாரி இறைக்கப்படும்.
அதே போல் மிகவும் விலையுயர்ந்த மூன்று வெளிநாட்டு வீரர்கள் ரபாடா, குயின்டன் டி காக், டேவிட் வார்னர், இவர்களில் ஒருவர் அதிக விலை கொண்ட வெளிநாட்டு வீரராகவும் இருப்பார். ” என்கிறார் ஆகாஷ் சோப்ரா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2022, Shreyas Iyer