Home /News /sports /

சிஎஸ்கே ஏலத்தில் ஷிவம் துபேவுக்கு ஒரே நாளில் டபுள் ஜாக்பாட்!

சிஎஸ்கே ஏலத்தில் ஷிவம் துபேவுக்கு ஒரே நாளில் டபுள் ஜாக்பாட்!

ஷிவம் துபே

ஷிவம் துபே

ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிவம் துபேக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் பெங்களுருவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. 10 அணிகளும் தங்களக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். கடந்த ஐபிஎல் தொடரில் சரியாக ஆடாத வீரர்கள் பலரும் இந்த ஐபிஎல் விலை போகவில்லை. அவர்களில் முக்கியமாக மிஸ்டர் ஐபிஎல் என்று பெயர் எடுத்த சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, புஜாரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என பலரை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை.

அதே போல் யாரும் எதிர்பாராத விலைக்கு பல வீரர்கள் ஏலத்திற்கு போய் உள்ளனர். சென்னை அணி இந்த ஏலத்தில் தீபக் சஹரை அதிகபட்சமாக ரூ.14.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இரண்டாவது நாளான இன்று சில வீரர்களை குறிவைத்து சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்த ஆல் ரவுண்டர் சிவம் துபேவை சிஎஸ்கே ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Also Read : சிஎஸ்கே-வுக்கு கிடைத்து விட்டார் இன்னொரு மைக் ஹஸ்ஸி - ஆம்! டெவன் கான்வே சென்னை வீரர்

சிவம் துபே இடதுக்கை அதிரடி ஆட்டக்காரர் மற்றும் பந்துவீச்சிலும் அவரை பயன்படுத்தி கொள்ளலாம். சிவம் துபே தோனி தலைமையில் சிஎஸ்கேவில் விளையாடுவது அவருக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் நிலையில் அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். பெண் குழந்தையுடன், சிஎஸ்கே அணியில் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது சிவம் துபேக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
Published by:Vijay R
First published:

Tags: CSK, IPL Auction

அடுத்த செய்தி