ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை குருகிராம் காவல்துறையினரிடம் நன்கொடையாக வழங்கினார் ஷிகர் தவான்.

 • Share this:
  கொரோனா தொற்றினால் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் வைக்க வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஆக்சிஜன் செறிவூக்கிகளை நன்கொடையாக வழங்கி உதவி புரிந்தார்.

  ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை குருகிராம் காவல்துறையினரிடம் நன்கொடையாக வழங்கினார் ஷிகர் தவான்.

  சமீபத்தில் கொரோனா முதல் தடுப்பூசில் செலுத்திக் கொண்ட தவான் ஏற்கெனவே கொரோனா நிவாரணத்துக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கினார். இது போக, ஐபிஎல் 2021 தொடரில் இவர் ஆட்ட நாயகன் விருதுகள் உள்ளிட்டதன் மூலம் கிடைத்த தொகைகளையும் கொரோனா நிவாரணத்துக்கு நன்கொடையாக அளித்தார்.

  இது குறித்து குருகிராம் காவல்துறையினர் ஷிகர் தவானுக்கு நன்றி தெரிவித்து சமூக ஊடகத்தில் பதிவிட, அதற்குப் பதில் அளித்த ஷிகர் தவான், “தற்போதுள்ள கடினமானச் சூழ்நிலையில் இது போன்ற சிறு உதவிகளைச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  என் நாட்டு மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்யக் காத்திருக்கிறேன். இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக இந்தியா எழுச்சி பெற்று ஜொலிக்கும்” என்று தன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  கிரிக்கெட் ஆட்டத்திலும் தன்னலமற்ற விதத்தில் அணிக்காக ஆடும் ஷிகர் தவானுக்கான உரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்காக செல்லும் இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட பிரகாசமான வாய்ப்பிருக்கிறது.

  மூத்த வீரர்கள் இங்கிலாந்தில் பிசியாக இருப்பார்கள் என்பதால் ஷிகர் தவானுக்கு இந்த வாய்ப்பை அளிப்பதை ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்

  கொரோனாவிலிருந்து மீள இந்திய வீரர்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை நிவாரணமாக வழங்கி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் இவர்கள் தற்போது நல்ல பெயர் எடுத்து வருகின்றனர்.
  Published by:Muthukumar
  First published: