'இனியவளே என்று பாடிவந்தேன்... இனி அவள்தான் என்று ஆகி விட்டேன்': அனுஷ்கா சர்மா குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி

விராட் கோலி- அனுஷ்கா சர்மா.

தன்னை ஒரு மனிதனாக மாற்றிய பெருமை மனைவி அனுஷ்கா சர்மாவுக்கே சேரும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் புகழ்ந்து பேசியுள்ளார்.

 • Share this:
  தன்னை ஒரு மனிதனாக மாற்றிய பெருமை மனைவி அனுஷ்கா சர்மாவுக்கே சேரும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் புகழ்ந்து பேசியுள்ளார்.

  அனுஷ்கா சர்மாவை சந்தித்தப் பிறகுதான் தன் அணுகுமுறையில் உலகப்பார்வையில் மாற்றம் ஏற்பட்டது என்கிறார் விராட் கோலி. விளம்பரம் ஒன்றில் அனுஷ்காவுடன் நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஆரம்பித்து டிசம்பர் 2017-ல் திருமணமானது.

  விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா


  அதன் பிறகு எந்த நேர்காணலாக இருந்தாலும் அனுஷ்கா சர்மா தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம், தன்னிடம் ஏற்படுத்திய பாசிட்டிவ் மாற்றம் ஆகியவற்றை விராட் கோலி குறிப்பித் தவறியதில்லை.

  தினேஷ் கார்த்திக்குடன் நீண்ட உரையாடல் மேற்கொண்ட விராட் கோலி, தன்னை தணித்து ஒரு மனிதனாக மாற்றியது அனுஷ்காதான் என்று கூறினார்.

  “நான் மட்டும் அனுஷ்காவை சந்திக்கவில்லை எனில் நான் எங்கு முடிந்திருப்பேன் என்று தெரியவில்லை. நான் எங்கு இருக்கிறேன் என் செயல்கள் மூலம் நான் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தவளே அனுஷ்காதான். அவர்தான் என்னை தணித்து ஒரு மனிதனாக மாற்றினார். இது கிரிக்கெட்டிலும் ஊடுருவியது.

  Anushka Sharma - Virat Kohli at the airport with baby: Photos going viral!

  அவரைப்போன்ற வாழ்க்கைத் துணை அமைய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டு, அதற்காக நன்றிக்கடன் பட்டவனாகிறேன். அவர் உண்மையில் சிறந்த வாழ்க்கைத் துணையாவார்.

  இப்போது என் மகள் வாமிகா, இவரைத் தூங்கச் செய்து விட்டு, காலை உணவுக்கு வெளியே வருவோம். கிடைக்கும் நேரத்தில் ஒரு காஃபி அருந்துவோம். மீண்டும் ரூமுக்கு வந்து மகளுடன் நேரத்தை செலவிடுவோம்.

  Anushka Sharma - Virat Kohli at the airport with baby: Photos going viral!

  இங்கிலாந்தின் வீதியில் இருவரும் நடப்போம், இது எங்களுக்கு மிகவும் ரிலாக்ஸான ஒரு வாக். இந்தியாவில் அப்படி ரிலாக்சாக நாங்கள் இருவரும் வாக் செய்ய முடியாது. அதற்காக வாழ்க்கையில் எதன் மீதும் புகார் இல்லை, ஆனால் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Anushka Sharma - Virat Kohli at the airport with baby: Photos going viral!

  இந்தியாவில் இப்படி தெருவில் இறங்கி நடப்பது இப்போது எங்கள் இருவருக்குமே கனவு கூட அல்ல. அப்படி ஒரு இந்திய வீதியில் நடப்பது போன்ற கனவு கூட இருவருக்கும் இப்போது வருவதில்லை.” என்றார் விராட் கோலி.
  Published by:Muthukumar
  First published: