• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தோனியின் அறையில் நான் அவர் பேட்டை எடுத்த போது...- முக்கியத் தகவலைப் பகிரும் ஷர்துல் தாக்கூர்

தோனியின் அறையில் நான் அவர் பேட்டை எடுத்த போது...- முக்கியத் தகவலைப் பகிரும் ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

தன்னுடைய பேட்டிங் முன்னேற்றத்துக்கு தோனி கொடுத்த டிப்ஸ் மற்றும் அணி நிர்வாகம், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர்தான் காரணம் என்கிறார் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர்.

  • Share this:
    மற்ற பவுலர்களைக் காட்டிலும் வலையில் ஷர்துல் தாக்கூருக்கு அதிக நேரம் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கிறது. பேட் கிரிப்பை கொஞ்சம் கீழே தள்ளிப் பிடிக்குமாறு தோனி கொடுத்த டிப்ஸ் தான் ஷர்துல் பேட்டிங்கில் அவரை முன்னேற்றியுள்ளது, பேட் கைப்பிடியை இன்னும் கொஞ்சம் கீழே பிடித்தால் ஷாட்களில் கட்டுப்பாடு இருக்கும் என்று கூறியது தோனி. மேலும் அணியில் த்ரோ ஸ்பெஷலிஸ்ட் பயிற்சியாளர்களான ரகு மற்றும் நுவான் ஆகியோரும் ஷர்துல் பேட்டிங்கிற்கு உதவியுள்ளனர். கபில் தேவுக்குப் பிறகு ஒரு நல்ல ஆல்ரவுண்டரை தேடி வருகிறது இந்திய அணி.

    இதனால் ஷர்துல் தாக்கூர் ஆஸ்திரேலியாவில் 67 ரன்களை விளாசினார், கமின்ஸ் பந்தை ப்ளே என்றவுடன் ஹூக் ஷாட்டில் சிக்ஸ் விளாசினார், இங்கு ஆலி ராபின்சனை லாங் ஆஃபில் அடித்த சிக்ஸ் வேறு ஒரு தரநிலையிலானது. ஓவல் டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூர் அடித்த 2 அரைசதங்கள்தான் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றது. இந்த 3 இன்னிங்ஸ்களும் ஷர்துல் தாக்கூரை அடுத்த கபில் தேவ் என்ற கனவை நிறைவேற்றக்கூடியவராக மாற்றியுள்ளது.

    இந்நிலையில் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு ஷர்துல் தாக்கூர் அளித்த பேட்டியில், “கீழ்வரிசை வீரர்கள் பேட்டிங்கில் பங்களிப்பு செய்வது அணிக்கு பெரிய உதவியாகும். 40-50 ரன்கள் ஒரு பெரிய வித்தியாசத்தை டெஸ்ட் போட்டியில் ஏற்படுத்தி விடும். நான் மீண்டும் இந்திய அணிக்குள் வந்த போது த்ரோ ஸ்பெஷலிஸ்ட் ரகு மற்றும் நுவானுடன் பயிற்சி மேற்கொண்டேன். அவர்கள் அதிவேகமாக வீசக்கூடியவர்கள்.

    இதோடு விராட் கோலி, ரோகித் சர்மா எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்தனர். பேட்டிங் செய்யும் போது பேட்ஸ்மென் போல் சிந்திக்க வேண்டும் என்றனர். ஒருமுறை தோனியின் அறையில் அவரது பேட்டை எடுத்து நிழல் பேட்டிங் செய்தேன். அப்போது அவர் என் கிரிப்பைப் பார்த்து கொஞ்சம் மேலாக மட்டையை பிடிக்கிறாய் இன்னும் கொஞ்சம் கீழே பிடி அப்போதுதான் ஷாட்டைக் கட்டுப்படுத்த முடியும் என்றார். அதுதான் எனக்கு முக்கியமான டிப்ஸ்.

    Also Read: டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

    நான் பேட்டிங் ஆட முடியும் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. எங்கு ஸ்கோர் செய்ய முடியும் என்ற ஸ்பாட்டை சரியாக பிடிக்க வேண்டும். பிரிஸ்பன் இன்னிங்ஸுக்குப் பிறகே ஓய்வறையில் அது தாக்கம் செலுத்தும் என்பது சொல்ல வேண்டியதில்லை. பேட்டிங் செய்யும் போது நான் அதிகம் யோசனை செய்வதில்லை. நேராக ஆட வேண்டும் அவ்வளவே. ஷாட் ஆடும் முன் நல்ல நிலையில் நிற்க வேண்டும் நேராக ஆடினோம் என்றால் பிறகு கிராஸ் பேட் ஷாட்கள் தானாகவே வரும்” என்றார் ஷர்துல்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: