ஆஸ்திரேலியா தொடரில் சந்திப்போம் என நடராஜனுக்கு டேவிட் வார்னர் உற்சாக அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் 2020 தொடரில் இந்திய அணி வீரர்கள் தற்போது விளையாடி வருகின்றனர். ஐ.பி.எல் 2020 தொடர் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. ஐ.பி.எல் 2020 தொடருக்கு பின் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்கள் 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 27-ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. தமிழகத்தை சேர்ந்த நடராஜன் கூடுதல் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்திக்கு தோளில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
சேலத்தை சின்னம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் இந்திய அணியில் தேர்வாகி உள்ளதற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நடராஜனை வாழ்த்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நடராஜனுக்கு உற்சாக அழைப்பு விடுத்துள்ளார்.
ஐ.பி.எல் 2020 தொடரில் ப்ளே ஆஃப் குவாலிபையர் 2-வது போட்டியில் சன்ரைசர்ஸ் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இதை தொடர்ந்து அணி வீரர்களுடான அனுபவங்களை டேவிட் வார்னர் ட்விட்டரில் பகிர்ந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நடராஜன் தேர்வாகி உள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர் ஆஸ்திரேலியாவில் சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்