David Warner | இறந்தவர்களின் உடலுடன் மக்கள் வரிசையில் நிற்பதை பார்த்த போது வேதனை அடைந்தேன்: இந்திய கொரோனா அனுபவத்தைப் பகிர்ந்த வார்னர்

டேவிட் வார்னர்.

ஐபிஎல் போட்டிகளை நிறுத்தியது நல்ல முடிவுதான். இந்தியாவில் அனைவரும் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் என்பதை நாம் அறிவோம். மக்கள் தொகையில் பாதிப்பேர் என்ன நடந்தாலும் தங்கள் முகத்தில் புன்னகையுடன் கிரிக்கெட்டை ஆவலுடன் பார்க்கிறார்கள், என்கிறார் வார்னர்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது பார்த்த காட்சிகள் திகிலூட்டுவதாகவும், மனவருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் ஆஸ்திரேலிய வீரரும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முந்தைய கேப்டனுமான டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார்.

    ஐபிஎல் 2021 தொடரின் பயோபபுளையும் உடைத்துக் கொண்டு வீரர்கள் பலருக்கும், பயிற்சியாளர்கள் மைக் ஹசி, எல்.பாலாஜி போன்றோருக்கும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து போட்டித் தொடர் நிறுத்தப்பட்டது.

    சர்வதேச வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

    Also Read: மன ஆரோக்கியம் மிக முக்கியம், மைதானத்தை விட்டால் விடுதி என்ற நிலை திணறடிக்கிறது: விராட் கோலி ஆதங்கம்

    இந்த நிலையில் கொரோனா இந்தியாவில் தீவிரமாக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை டி.வி.,யில் அப்போது பார்த்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது.

    நாங்கள் மைதானத்துக்கு செல்லும்போது கொரோனாவால் இழந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் உடலுடன் மக்கள் வரிசையில் நிற்பதைப் பார்த்திருக்கிறோம். மைதானத்துக்குச் செல்லும் போதும் மைதானத்திலிருந்து விடுதிக்குச் செல்லும்போதும் இதே காட்சிகள் நெஞ்சை உலுக்கின, அதோடு பயங்கரமாக இருந்தது.

    நிச்சயம் அது திகிலூட்டியது. மனிதாபிமான பார்வையில் உண்மையில் அது மனதைப் பிசைந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஐபிஎல் போட்டிகளை நிறுத்தியது நல்ல முடிவுதான். இந்தியாவில் அனைவரும் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் என்பதை நாம் அறிவோம். மக்கள் தொகையில் பாதிப்பேர் என்ன நடந்தாலும் தங்கள் முகத்தில் புன்னகையுடன் கிரிக்கெட்டை ஆவலுடன் பார்க்கிறார்கள்.

    Also Read:  England vs New Zealand | அறிமுக டெஸ்ட்டில் சதமடித்து அசத்தல் : டெவன் கான்வேயின் 136 நாட் அவுட்டினால் நியூசிலாந்து டாப்

    மிகவும் சவாலாக இருந்தது, மாலத்தீவுகளிலும் இதே காரணத்துக்காகவே பலரும் வந்தனர். இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது.

    இவ்வாறு கூறினார் டேவிட் வார்னர்.
    Published by:Muthukumar
    First published: