Home /News /sports /

ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகிய சிஎஸ்கே முக்கிய வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகிய சிஎஸ்கே முக்கிய வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி

சிஎஸ்கே

சிஎஸ்கே

ஐபிஎல் 2021 தொடரில் சிஎஸ்கே அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் காயம் காரணமாக முக்கிய வீரர் விலகி உள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 தொடரில் சிஎஸ்கே முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. சென்னையை தொடர்ந்து டெல்லி, பெங்களூரு அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் 4-வது அணி எது என்பது தான் கடும் போட்டியாக அமைந்துள்ளது.

    கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றுகளுடன் வெளியேறியது. இதனால் சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்து பலர் விமர்சனங்கள் தெரிவித்த நிலையில் அவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்து தற்போது சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லும் என பலர் கணித்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரன் காயம் காரணமாக ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகி உள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சாம் கரணுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில், அவரது முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சாம் கரன் ஒரிரு நாட்களில் துபாயில் இருந்து நாடு திரும்பவுார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    சாம் கரன் டி.20 உலகக்கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக அவரது சகோதரரான டாம் கரன், டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சாம் கரன் இருந்தார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சாம் கரன் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்து வந்தது. ஆனால் ப்ளே ஆப் சுற்றுகளில் சாம் கரன் மீண்டும் பார்முக்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி உள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: CSK, IPL 2021, News On Instagram

    அடுத்த செய்தி