இது வெறும் விளையாட்டு மட்டுமே.. நம் மனதில் எப்போதும் அவர்கள் சூப்பர் கிங்ஸ்தான் - சாக்‌ஷி தோனி உணர்ச்சிகர பதிவு..

சாக்‌ஷி தோனி

”நிஜமான வீரர்கள் போராட பிறக்கிறார்கள். அதனால், அவர்கள் நமது மனதிலும், இதயத்திலும் சூப்பர் கிங்ஸ்தான் எப்போதும்” என பதிவிட்டிருக்கிறார் சாக்‌ஷி தோனி.

 • Share this:
  ’இது வெறும் விளையாட்டு மட்டுமே. இதில் சிலவற்றை வெல்ல முடியும். சிலவற்றை இழக்க முடியும். நம் மனதிலும், இதயத்திலும், அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ்தான்’ என ஐ.பி.எல் 2020-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்து பதிவிட்டுள்ளார் சாக்‌ஷி தோனி.

  தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் போடியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில்,  மீதமுள்ள ஆட்டங்களை விளையாடி வருகிறது.

      
  View this post on Instagram
   

  💛


  A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on
   

  நேற்று நடைபெற்ற போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூருவை எதிர்த்து விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிக்கரமான பதிவு ஒன்றை போஸ்ட் செய்திருக்கும் சாக்‌ஷி தோனி, “இது வெறும் விளையாட்டு. சிலவற்றை இழக்கிறார்கள்..சிலவற்றை பெறுகிறார்கள். இதற்கும் முன்பு வெற்றிகளையும், வலிகொடுக்கும் தோல்விகளையும் சந்தித்து இருக்கிறோம். யாரும் தோற்க விரும்பவில்லை. ஆனால் அனைவராலும் வென்றுவிட முடியாது”

  மேலும் படிக்க: தூத்துக்குடி சலூன்கடையில் நூலகம் நடத்திவரும் பொன் மாரியப்பனுடன் பிரதமர் மோடி உரையாடல்..

  ”நிஜமான வீரர்கள் போராட பிறக்கிறார்கள். அதனால், அவர்கள் நமது மனதிலும், இதயத்திலும் சூப்பர் கிங்ஸ்தான் எப்போதும்” என பதிவிட்டிருக்கிறார்.  ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
  Published by:Gunavathy
  First published: