Home /News /sports /

IPL 2022 CSK- ஜடேஜா விலகல்- சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் ஜடேஜாவை அன் ஃபாலோ செய்தது ஏன்? பெருகும் வதந்திகள்

IPL 2022 CSK- ஜடேஜா விலகல்- சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் ஜடேஜாவை அன் ஃபாலோ செய்தது ஏன்? பெருகும் வதந்திகள்

தோனி - ஜடேஜா

தோனி - ஜடேஜா

கேப்டன்சி மாற்ற விவகாரத்தை சரியான முறையில் கையாளாவில்லை என்ற ஆதங்கத்திலும் வருத்தத்திலும் ஜடேஜா இருப்பதாகவும் சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் ஜடேஜாவை அன்ஃபாலோ (unfollow) செய்ததும் சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்குமான விரிசல் அதிகரித்திருக்கிறது என்பதாக வதந்திகளை கிளப்பி விட்டுள்ளன.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  கேப்டன்சி மாற்ற விவகாரத்தை சரியான முறையில் கையாளாவில்லை என்ற ஆதங்கத்திலும் வருத்தத்திலும் ஜடேஜா இருப்பதாகவும் சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் ஜடேஜாவை அன்ஃபாலோ (unfollow) செய்ததும் சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்குமான விரிசல் அதிகரித்திருக்கிறது என்பதாக வதந்திகளை கிளப்பி விட்டுள்ளன.

  சிஎஸ்கேவில் இப்படி நடப்பது முதல் முறையல்ல. ரெய்னா ஒரு முறை தோனியுடன் கருத்து வேறுபாட்டினால் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஐபிஎல் தொடரிலிருந்து தாயகம் திரும்பி தொடர் முழுதையும் புறக்கணித்தார். அப்போதும் இருதரப்பும் என்ன நடந்தது என்பது பற்றி வெளியே சொல்லாமலேயே வதந்திகளுக்கு வழிவகுத்தனர். உண்மையை விட வதந்திகள் எப்போதும் வண்ணமயமானது. மேலும் வதந்திகள் பெருகப் பெருக உண்மை அதன் அடியாழத்தில் மறைந்தே போய் விடும்.

  ஐபிஎல் கிரிக்கெட் என்பது பிக்பாஸை விடவும் ஒரு பெரிய ரியால்டி ஷோவாக இருப்பதுதான் பிரச்சனை. இன்று ஜடேஜா என்ற ஒரு இந்திய வீரரின் மனதை நோகடித்து விட்டனர், அவர் இன் இந்தியாவுக்காக ஷைன் செய்வாரா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

  ஐபிஎல் அணி நிர்வாகங்கள், கேப்டன்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் அதில் ஆடும் இந்திய வீரர்கள் இந்திய அணிக்காக ஆட வேண்டியவர்கள் அல்லது ஆடியவர்கள், உலகக்கோப்பை டி20 இருக்கும் நிலையில் ஜடேஜாவை மனத்தளவில் உடைத்து நொறுக்கி விட்டால் இந்திய அணிக்குத்தான் பேரிழப்பு. அதுவும் அவர் டெஸ்ட் போட்டிகளில் 175 ரன்களையெல்லாம் எடுத்து ஒரு ஆல்ரவுண்டராக பரிணமித்து வரும் சமயத்தில் இப்போது சிஎஸ்கே அவரை காயம் காரணமாக உட்கார வைத்துவிட்டது.

  மேலும் கேப்டன்சி விவகாரத்தில் சரியாகக் கையாளவில்லை. ஜடேஜா கேப்டன்சி செய்யவில்லை, நான் தான் கேப்டன்சி செய்கிறேன் என்பதை தோன் பொதுவெளியில் கூறியிருக்க கூடாது, அதாவது ஒரு கட்டத்தில் வெறும் டாஸுக்காக மட்டுமே நான் கேப்டனா என்று ஒருவர் நினைத்து விடக்கூடாது என்று தோனி பேசினார், இது நிச்சயம் ஜடேஜாவை காயப்படுத்தியிருக்கும்.

  ஆனால் இதிலிருந்தெல்லாம் தோனியின் இமேஜ் காப்பாற்றப்பட்டு விடும் ஒன்று சிஎஸ்கே நிர்வாகம் என்பார்கள், அல்லது ஸ்டீபன் பிளெமிங் மேல் தூக்கி பழியைப் போடுவார்கள்.

  தோனி ஆகட்டும் சிஎஸ்கேவாகட்டும் அல்லது வேறு ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்கள் ஆகட்டும் அவர் இந்திய அணிக்கு ஆடும் வீரர் என்ற நினைவுடன் கையாள வேண்டும், இத்தனையாண்டுகள் ஜடேஜா போட்ட உழைப்பு, ட்ரெய்னிங், பீல்டிங் முன்னேற்றம், பேட்டிங்கில் பிரமாதமாக ஆடும் மாற்றம் அனைத்தையும் ஐபிஎல் அணி நிர்வாகம் காலி செய்ய உரிமைஇல்லை என்பதை பிசிசிஐ ஐபிஎல் அணிகளுக்கு அறிவுறுத்தினால் நல்லது என்றே தோன்றுகிறது.

  மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த செய்தி ஒன்றில் கூறியிருப்பது என்னவெனில் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அணியின் சில வீரர்களே கூறியதாக எழுதியுள்ளது. கேப்டன்சி மாற்ற விவகாரம் சரியாகக் கையாளப்படவில்லை என்று ஜடேஜா கருதுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  அதாவது சிஎஸ்கே நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ஜடேஜா உணர்வதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்த கருத்து வேறுபாடுகளை மறுத்த சிஎஸ்கே சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் மருத்துவ ஆலோசனையின் படியே ஜடேஜா விலகல் நடந்துள்ளது, மற்றபடி சிஎஸ்கேவின் எதிர்காலத் திட்டங்களில் ஜடேஜா நிச்சயம் இருப்பார் என்கிறார், ரெய்னா விவகாரத்திலும் இதே போன்றுதான் பேசப்பட்டது.

  இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடர் உள்ளது, இங்கிலாந்தில் மீதமுள்ள மிக முக்கியமான டெஸ்ட் போட்டி ஒன்றும் ஒருநாள், டி20 தொடர் இருக்கிறது. ஏற்கெனவே அவரை சிஎஸ்கே காலி செய்ததால் அவர் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

  வீரர்களை ஒரு பக்கம் உருவாக்கும் ஐபிஎல் கிரிக்கெட் இன்னொரு புறம் நல்ல வீரர்களை இழப்பதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறது என்பதை பிசிசிஐ கவனமேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளும்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: CSK, IPL 2022, MS Dhoni, Ravindra jadeja

  அடுத்த செய்தி