• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இஷான் கிஷன் சூறாவளி ஆட்டம்- ராஜஸ்தானை 8 ஓவரில் வீழ்த்திய மும்பை அணி

இஷான் கிஷன் சூறாவளி ஆட்டம்- ராஜஸ்தானை 8 ஓவரில் வீழ்த்திய மும்பை அணி

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 51-வது லீக் போட்டியில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் சார்ஜா மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்றைய போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும் முக்கியத்துவமானதாகும். ஆனால் ராஜஸ்தான் தொடக்கம் முதலே மும்பை அணியிடம் விக்கெட்களை பறிகொடுத்து வந்தது. ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் 50 ரன்களுக்குள் அவுட்டாகினர். தொடக்க வீரர் எவின் லூயிஸ் 24 ரன்கள் அடித்ததே அதிகப்பட்ச ரன்களாக இருந்தது.

    ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி பவுலர் நாதன் குல்டர் நைல் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் நஷீம் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். அதனையடுத்து, 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோஹித் சர்மா களமிறங்கினர்.

    அதிரடியாக ஆட முயற்சி செய்த ரோஹித் சர்மா 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷன் அதிரடியாக ஆடி வந்தார்.

    அவர் இறுதிவரையில் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்களை எடுத்து மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதன்மூலம், 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பு மும்பை அணி 94 ரன்கள் எடுத்துவெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5 இடத்துக்கு முன்னேறியது மும்பை அணி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: