ஆர்சிபி-யின் இரண்டு முக்கிய வீரர்கள் ஐபிஎல் 2021 தொடரிலிருந்து விலகல்

சாம்ப்பா, ரிச்சர்டச்ன் ஐபிஎல் 2021லிருந்து விலகல்.

கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்களான லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் சொந்தக் காரணங்களுக்காக ஆஸ்திரேலியா திரும்புகின்றனர், 2021 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்களான லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் சொந்தக் காரணங்களுக்காக ஆஸ்திரேலியா திரும்புகின்றனர், 2021 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

  ஆண்ட்ரூ டை சொந்தக் காரணங்களுக்காக விலகியதை அடுத்து தற்போது ஆடம் ஸாம்ப்பா, கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோரும் ஊர் திரும்ப முடிவெடுத்துள்ளனர்.

  சொந்தக் காரணம் என்னவெனில் இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தலே. நேற்று இரவு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தினர் கொரோனாவை எதிர்த்துப் போராடும் சூழ்நிலையில் அவர்களுடன் இருக்கப் போவதாக அறிவித்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.  ஆடம் ஸாம்ப்பா இன்னும் இந்த சீசனில் ஆடவில்லை, கேன் ரிச்சர்ட்ஸன் ஒரு போட்டியி ஆடி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

  சென்னை, மும்பையில் முதல் 20 போட்டிகள் நடைபெற்ற பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகள் அகமதாபாத் மற்றும் டெல்லிக்கு நகர்ந்துள்ளன.

  இதில் நகைமுரண் என்னவெனில் இந்தியாவில் அதிக கொரோனா தொற்று உள்ள நகரங்களில் டெல்லி உள்ளது, குஜராத்தின் அகமதாபாத்திலும் வைரஸ் கேஸ் லோடு அதிகம். இந்நிலையில் இந்த 2 இடங்களுக்கும் ஐபிஎல் போட்டிகள் நகர்த்தப்பட்டுள்ளது.

  நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜடேஜாவின் தனிமனித திறமையினால் சிஎஸ்கே, ஆர்சிபியை வீழ்த்தி முதல் தோல்வியை பரிசாகத் தந்தது. மற்றொரு ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் செல்ல கடைசியில் ரிஷப் பந்த் தலைமை டெல்லி அணி வார்னர் தலைமை ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வென்றது.
  Published by:Muthukumar
  First published: