விளையாட்டு

  • associate partner

மெஸ்ஸியின் கால்பந்து அணிக்கு வீரர்களைப் பரிந்துரைக்கும் ஆர்.சி.பி - கோலிக்கு இடம் கிடைக்குமா?

மெஸ்ஸியின் கால்பந்து அணிக்கு வீரர்கள் தேவையா என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தெரிவித்துள்ளது.

மெஸ்ஸியின் கால்பந்து அணிக்கு வீரர்களைப் பரிந்துரைக்கும் ஆர்.சி.பி - கோலிக்கு இடம் கிடைக்குமா?
கோலி
  • Share this:
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020 செப்டம்பர் 19 முதல் தொடங்க உள்ளது. இதனையடுத்து அனைத்து அணிகளின் வீரர்களும் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தை அடைந்துள்ளனர்.

அங்கு அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளின் படங்கள் மற்றும் கிளிப்புகள் அடங்கிய வீடியோக்கள் ஆன்லைனில் பகிரப்படுகின்றன. அணியின் பிணைப்பை அதிகரிப்பதற்காக  பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும் கால்பந்து விளையாடுவதைக் காணலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினரும் தங்கள் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் ஆர்வத்துடன் வைத்துக்கொள்ள சமூக ஊடக இணையதளங்களை தீவிரமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒரு சமீபத்திய பதிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி வீரர்கள் கால்பந்து விளையாடும் ஒரு காட்சியைப் ஆர்சிபி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


அதன் கேப்சனில் “மெஸ்ஸி சில புதிய அணியினரைத் தேடுவதாக நாங்கள் கேள்விப்பட்டோம்" என்று எழுதியுள்ளனர். முன்னதாக கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். 33 வயதான அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி தனது ஒப்பந்தத்தை ரத்து செய்ய விரும்புவதாகவும், உடனடியாக அணியை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என பார்சிலோனா கிளப்பிற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

மெஸ்ஸியுடனான ஒப்பந்தமானது, கடந்த ஜூன் மாதமே முடிவடைந்துவிட்டதாக பார்சிலோனா கிளப் தரப்பில் சொல்லப்படுகிறது. அதே சமயம் ஒப்பந்தத்தில் உள்ள விதிகள்படி, 700 மில்லியன் யூரோவுக்கு 2021ம் ஆண்டு சீசன் இறுதி வரை பார்சிலோனாவுக்காக விளையாட மெஸ்ஸி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது விருப்பமில்லாமல் மெஸ்ஸி விளையாடி வருவதையே மெஸ்ஸியின் சமீபத்திய சமூகவலைத்தள பதிவு காண்பிக்கிறது.



அதில் நீதிமன்ற வழக்கைத் தவிர்ப்பதற்காக இன்னும் ஒரு வருடத்திற்கு கிளப்பை விட்டு வெளியேற மாட்டேன் என்று லியோனல் மெஸ்ஸி தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் அவர் “நான் இப்போது மகிழ்ச்சியாக இல்லை, நான் வெளியேற விரும்பினேன். இதை நான் எந்த வகையிலும் அனுமதிக்கவில்லை, சட்ட மோதலில் சிக்காமல் இருப்பதற்காக மட்டும் நான் கிளப்பில் இருக்கிறேன்.


அடுத்த ஆண்டு வரை நான் இதே அணியில் விளையாடுவேன்” என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸி இவ்வாறு பதிவிட்டுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினர் வேடிக்கையாக தாங்கள் பயிற்சி பெறும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளனர். ஐபிஎல் 2020 முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. வெற்றியை நோக்கி இரு அணிகளும் முனைப்புடன் பயிற்சி செய்து வருகின்றனர்
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading