ஐபிஎல் தொடரில் தோனியின் சாதனையை கடந்த ரோகித் சர்மா!

ரோகித் - தோனி

ரோகித் சர்மா இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 217 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

  • Share this:
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் மகேந்திர சிங் தோனியின் சாதனையை கடந்துள்ளார் ரோகித் சர்மா.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி இன்று (ஏப்ரல் 17) நடைபெறுகிறது. அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களத்திற்கு வந்த ரோகித் சர்மா 25 பந்துகளை சந்தித்து அதில் 32 ரன்களை எடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். தனது இன்னிங்ஸில் அவர் 2 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் ஐபில் தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் வரிசையில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

ரோகித் சர்மா இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 217 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன் மூலம் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் வரிசையில் தோனியை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 216 சிக்ஸர்களுடன் தோனி 4ம் இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார். அவர் மொத்தம் 351 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். (அவரை சிக்ஸ் மன்னன் என்று சும்மாவா அழைக்கிறார்கள்?) அவரை அடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் ஏபி டி வில்லியர்ஸ் 237 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் முதல் இரண்டு வீரக்களும் வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர் இந்த வகையில் ஐபிஎல்-ல் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்தியர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
Published by:Arun
First published: