• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மகத்தான சாதனை

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மகத்தான சாதனை

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 34-வது லீக் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதி. அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா திரும்பி உள்ளது அந்த அணிக்கு பலமாக அமைந்தது.

    ரோஹித் சர்மா இன்றையப் போட்டியில் 33 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் ரோஹித் சர்மா தான்.

    ரோஹித் சர்மாவிற்ககு அடுத்தப்படியாக சன்ரைசர்ஸ் வீரர் டேவிட் வார்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக 943 ரன்கள் மற்றும் கேகேஆர் அணிக்கு எதிராக 915 ரன்கள் எடுத்துள்ளார். ஆர்சிபி கேப்டன் விராட் கோலி டெல்லிக்கு எதிராக 909 ரன்கள் அடித்துள்ளார்.

    கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பயிதால் அந்த அணி ரன்எடுக்க தடுமாறியது. இஷான் கிஷான் (14), பொல்லார்டு (21), குர்ணால் பாண்டியா (12) ரன்களில் அவுட்டாகினர். ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய மும்பை இறுதி ஓவர்களில் ரன் குவிக்க திணறியது. இதனால் 20 ஒவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: