ஐபிஎல் கிரிக்கெட்டா.. இல்ல ஸ்ட்ரீட் கிரிக்கெட்டா குழம்பிய ரசிகர்கள் - ரியான் பராக்கை எச்சரித்த அம்பயர்

ஐபிஎல் கிரிக்கெட்டா.. இல்ல ஸ்ட்ரீட் கிரிக்கெட்டா குழம்பிய ரசிகர்கள் - ரியான் பராக்கை எச்சரித்த அம்பயர்

ரியான் பராக்

ராகுலுக்கு நன்றாக பந்துவீசிய ரியான் பராக், கெய்ல் வந்ததும் தனது பவுலிங் ஸ்டைலை மாற்றினார்.

  • Share this:
    நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் கே.எல்.ராகுலும், கிறிஸ் கெய்ல் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர்.

    கிறிஸ் கெய்ல் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினார்.அவரிடம் பெரிதாக ஃபுட் வொர்க் இல்லை. ஆனால் அதுஎல்லாம் மத்த பேட்ஸ்மேன்களுக்கு தான் நான் யூனிவர்சல் பாஸ் என மிரட்டினார் கெய்ல். பென் ஸ்டோக்ஸ் வீசிய 8-வது ஓவரில் மிட் விக்கெட் திசைக்கு மேல் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு ஐபிஎல் வரலாற்றில் தனது 350-வது சிக்ஸரை பதிவு செய்தார் கெய்ல். 9வது ஓவரில் கடைசி பந்தில் திவாட்டியா ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார்.

    10-வது ஓவரை ரியான் பராக் வீசவந்தார். ராகுலுக்கு நன்றாக பந்துவீசிய ரியான் பராக் கெய்ல் வந்ததும் தனது பவுலிங் ஸ்டைலை மாற்றினார். அவரது பந்துவீச்சை பார்த்து கெய்ல் ஒரு நிமிடம் குழம்பிப்போனார். கைகளை தோள்பட்டைக்கு மேல் சுற்றி பந்துவீசுவதற்கு பதிலாக இடுப்புக்கு நேராக பந்துவீசினார்.

    இது என்ன ஐபிஎல் கிரிக்கெட்டா இல்ல ஸ்ட்ரீட் கிரிக்கெட்டா என ஒரு நிமிடம் அனைவரும் குழம்பினர். அண்டர்ஆர்ம் வகையில் பந்துவீசினார். இதனையடுத்து களநடுவர் ரியான் பராக்கை வார்னிங் செய்தார். கையை முழுமையாக சுற்றி பந்து வீசுமாறு கூறினார். அதே ஓவரில் ரியான் பராக் சாதாரணமாக வீசிய ஆஃப் ஸ்பின்னை தூக்கி அடிக்க முயன்று பவுண்டரி லைனில் பென் ஸ்டோக்ஸ் வசம் சிக்கினார்.
    Published by:Ramprasath H
    First published: