ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விதிமுறை மீறி மோசமானசெயல்பாடு.. ரிஷப் பந்திற்கு ரூ.1.15 கோடி அபராதம்

விதிமுறை மீறி மோசமானசெயல்பாடு.. ரிஷப் பந்திற்கு ரூ.1.15 கோடி அபராதம்

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்

ஐபிஎல் தொடரில் டெல்லி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ரிஷப் பந்த் விதிமுறைகளை மீறி மோசமாக செயல்பட்டதால் அவருக்கு ரூ.1.15 கேடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டியில் டெல்லி , ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லரின் அதிரடியான சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை சேர்த்தது. பட்லர் 116 (65), தேவ்தத் படிக்கல் 54 (35) ரன்களை விளாசினர்.

  இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணி அதிரடியாக விளையாடியதால் விக்கெட்களையும் இழந்து வந்தது. ப்ரிதிவ் ஷா 37 ரன்களிலும், கேப்டன் ரிஷப் பந்த் 44 ரன்கள் என அதிரடி காட்டி ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது. மிக்கே பந்துவீச்சில் ரௌமேன் பௌல் தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

  மூன்றாவது பந்தில் நோபால் கேட்கப்பட்டது. நடுவர் தரவில்லை. இதனால், பெவிலியனில் நின்றிருந்த ரிஷப் பந்த், ரௌமேன் பௌலை பெவிலியன் திரும்ப சொன்னார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடுவர் கூறியதால் ரௌமேன் மீண்டும் ரௌமேன் பேட்டிங்கிற்கு வந்தார். அடுத்த பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. இறுதியாக டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

  Also Read : எம்.எஸ்.தோனியின் 5 கிரேட்டஸ்ட் ஐபிஎல் பினிஷ்கள்

  இந்த போட்டிக்கு பின் பேசிய டெல்லி அணியின் கேப்டன் நடுவர்களின் தவறான முடிவே தோல்விக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார். அந்த நோ-பால்தான் ஆட்டத்தில் முக்கிய பங்காற்றியது. அதனை நோ-பால் என அறிவித்திருக்க வேண்டும். மூன்றாவது நடுவர் தலையிட்டிருந்தால், அது நோ-பாலாகத்தான் இருந்திருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் போட்டி விதிமுறைகளை மீறியதாக டெல்லி கேப்டன் ரிஷப் பந்திற்கு ஊதியத்தில் 100 சதவீதம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரிஷப் பந்திற்கு ரூ.1.15 கோடி அபராதமும் சர்துல் தாகூர் போட்டி ஊதியத்தில் 50 சதவீதமும் துணை பயிற்சிாளர் பிரவின் அம்ரே ஒரு போட்யில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: IPL 2022, Rishabh pant