மான்கட் முறையில் அவுட்டாக்காமல் தவிர்த்த அஸ்வின்: ரிக்கி பாண்டிங் கொடுத்த ரியாக்சன்

மான்கட் முறையில் அவுட்டாக்காமல் தவிர்த்த அஸ்வின்: ரிக்கி பாண்டிங் கொடுத்த ரியாக்சன்

அஸ்வின்

பெங்களூரு அணியின் வீரர் ஆரோன் ஃபின்ஞ்சை மான்கட் முறையில் அவுட் செய்யாமல் எச்சரிக்கை மட்டும் செய்யும்போது அணியின் கோச் ரிக்கி பாண்டிங் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகிவருகிறது.

 • Share this:
  கடந்த ஐ.பி.எல் தொடரின்போது சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்தார். அஸ்வினின் செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தது. இது நேர்மையான முறையல்ல. இந்த முறையில் வீரரை அவுட் செய்வது ஆட்டத்தின் மீதான ஈடுபாட்டைக் குறைக்கும் என்பதுபோன்ற கடுமையான விமர்சனங்கள் வந்தது. இருப்பினும், நான் ஆட்ட விதிமுறைகளின் கீழ்தான் விளையாடினேன் என்று அஸ்வின் தனது செயலை நியாப்படுத்தினர். இந்தநிலையில், நேற்றையப் போட்டியின் போது, ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை அஸ்வீன் வீசும்போது நான்ஸ்டைரைக்கில் நின்ற ஆரோன் ஃபின்ஞ்ச் கிரிஸ் லைனை விட்டு வெளியே சென்றிருந்தார்.

  அப்போது, அஸ்வின் அவரை அவுட் செய்யாமல் எச்சரிக்கை மட்டும் கொடுத்தார். அப்போது, டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சிரித்துக்கொண்டிருந்தார். அவருடைய ரியாக்சன் இணையத்தில் வைரலாகிவருகிறது. ஏனென்றால், முன்னதாக, அஸ்வினுடனான ஒரு உரையாடலின்போது, ‘மான்கட் முறையில் விக்கெட் எடுப்பது விதிமுறைகளில் இருந்தாலும் அது சரியான வழிமுறையில் பேட்ஸ்மேனை விக்கெட் எடுக்கும்முறையல்ல’ என்று வலியுறுத்தியிருந்தார்.


  அதனைப்பின்பற்றி, ஃபின்ஞ்சை அஸ்வின் விக்கெட் எடுக்காததற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்த அஸ்வின் ட்விட்டர் பதிவில், ‘நான், இதனை தெளிவுபடுத்துக்கொள்கிறேன்.
  SCHEDULE TIME TABLE:
  PURPLE CAP:
  2020-ம் ஆண்டுக்கான முதலும் கடைசியுமான எச்சரிக்கை. நான், இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன். பின்னர், என்னை குற்றம்சாட்டக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: