• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஒருநாள், டி20 கேப்டன்சியை விட்டுவிட கோலியை வலியுறுத்தியது ரவி சாஸ்திரிதான் - ரிப்போர்ட்

ஒருநாள், டி20 கேப்டன்சியை விட்டுவிட கோலியை வலியுறுத்தியது ரவி சாஸ்திரிதான் - ரிப்போர்ட்

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததன் பின்னணியில் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் அட்வைஸ் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    விராட் கோலியின் பேட்டிங் போய்க் கொண்டிருக்கிறது எனவே பேட்டிங்கில் முழு கவனம் செலுத்துமாறு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆலோசனை வழங்கியுள்ளார், அதாவது டி20 மட்டுமல்ல ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் கேப்டன்சியை உதறுமாறு ரவி சாஸ்திரி கோலிக்கு ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனே ஐபிஎல் கேப்டன்சி சுமையில்லையா என்ற கேள்விகள் எழ இந்த ஐபிஎல் 2021 சீசனோடு அதையும் உதறுகிறேன் என்று அறிவித்தார் விராட் கோலி.

    ஜனவரி 2017-ல் தோனி விலகியது முதல் விராட் கோலி இந்திய அணியின் அனைத்து வடிவ கேப்டன்சி பொறுப்பை ஏற்றார். 3 வடிவங்களிலும் சராசரி 50 க்கும் மேல் வைத்திருக்கும் ஒரே வீரர் விராட் கோலிதான். டெஸ்ட் போட்டியில்தான் அவர் கடந்த 2 ஆண்டுகளாக சதம் எடுக்கவில்லை, தற்போது இங்கிலாந்தில் சொதப்பி விட்டார், எனவே அவர் பிரச்சனை டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங்தான் இதற்கு ஒருநாள், டி20 கேப்டன்சி எந்த விதத்தில் காரணம் என்று தெரியவில்லை. அணியில் ரோகித் சர்மா லாபி கடுமையாக, வலுவாக உள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.

    சந்தீப் பாட்டீல் ஒரு முன்னாள் மும்பை வீரர், ரவிசாஸ்திரியும் ஒரு முன்னாள் மும்பை வீரர்தான், ரோகித் சர்மா பின்னால் மும்பை லாபி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. 2016 உலகக்கோப்பை டி20-யில் இந்திய அணி செமி பைனல் வரை வந்தது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இறுதியில் பாகிஸ்தானுடன் தோற்றது. அணியில் விராட் கோலி மீது இளம் வீரர்கள் அதிருப்தியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலியிடம் கேப்டன்சி பற்றி ரவி சாஸ்திரி 6 மாதங்களுக்கு முன்னரே பேசியதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

    ஆஸ்திரேலியா தொடரில் அடிலெய்ட் 36 ஆல் அவுட் தோல்விக்குப் பிறகு ரெகுலர் கேப்டன் இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்று வெற்றி பெற்றதையடுத்து இந்த கேப்டன்சி விவகாரம் தலைத்தூக்கியதாக பிசிசிஐ அதிகாரி கூறுகிறார். சாஸ்திரி கூறியும் கோலி ஒருநாள், டி20 கேப்டன்சியில் தொடந்திருக்கிறார். இப்போதுதான் ரவி சாஸ்திரி பேச்சுக்கு இணங்கி டி20 கேப்டன்சியை உதறியிருக்கிறார்.

    ஒருநாள் கேப்டன்சியைப் பொறுத்தமட்டில் 2023 உலகக்கோப்பைக்குள் அணித்தேர்வுக்குழுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிகிறது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: