தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்: தயார் என கூறும் தினேஷ் கார்த்திக்!

கோப்புப் படம்

கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் பலரும் தயக்கம்காட்டி வருகின்றனர். இதேபோல், நவம்பர் மாதம் சர்வதேச டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்தவே பல நாட்டு வீரர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர்

  • Share this:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக  தமிழகத்தைச் சேர்ந்தவரான  தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கியது. முக்கிய வீரர்கள் கொரோனா காரணமாக போட்டியில் இருந்து விலகினர். பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போட்டி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஆக்கிய அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செப்டம்பர் மாதத்தில் போட்டி தொடங்கும் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,  கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் பலரும் தயக்கம்காட்டி வருகின்றனர். இதேபோல், நவம்பர் மாதம் சர்வதேச டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்தவே பல நாட்டு வீரர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர்.  எனவே,  ஐபிஎல் போட்டியில் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவரும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவருபவருமான தினேஷ் கார்த்திக் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என   பேட் கம்மின்ஸ்  தெரிவித்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.  இயான் மோர்கனை பொருத்தவரை நிறைய மாதங்கள் உள்ளன. செப்டம்பர் மாதத்திற்குள் ஏராளமான மாற்றங்கள் நிகழலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதேவேளையில், அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தால் தான் அதற்கு தயாராகவே இருப்பதாகவும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

தற்போதைய  ஐபிஎல் தொடரில் 31 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் 2 வெற்றியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: