• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கடைசி ஓவர் பரபரப்பு: பந்துவீச்சில் அசத்தி பெங்களூரை வீழ்த்தியது ஹைதராபாத்

கடைசி ஓவர் பரபரப்பு: பந்துவீச்சில் அசத்தி பெங்களூரை வீழ்த்தியது ஹைதராபாத்

ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணி

பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் 52-வது போட்டியில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். அபிஷேக் சர்மா 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜார்ஜ் கார்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்ந்தனர்.

    வில்லியம்சன் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரியம் கார்க் 15 ரன்கள் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்ந்த ஜேசன் ராய் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆட்டநேர இறுதியில் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர்.

    கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய டேனியல் கிஹிஸ்டெய்ன் 1 ரன்களிலும், ஸ்ரீகர் பாரத் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் படிக்கல் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தார். அடுத்ததாக நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய க்ளென் மெக்ஸ்வேல் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அவர், 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்ஆனார். அதனையடுத்து, ஏபி டிவில்லியர்ஸ் களமிறங்கிய நிலையில், மறுபுறம் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் 41 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார்.

    கடைசி ஒரு ஓவரில் 13 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில் புவனேஸ்வர் குமார் பந்துவீசினார். கார்டன் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்தில் ரன் ஏதும் இல்லாத நிலையில் இரண்டாவது பந்தில் ஒரு ரன்னை எடுத்தார் கார்டன். அதனால், டிவில்லியர்ஸ் ஸ்ரைக்குக்கு வந்தார். மூன்றாவது பந்தில் பவுண்டரி விரட்ட முயல அது பீல்டரின் கைக்கு போனது. அதனால், ஏபி டிவில்லியர்ஸ் ரன் ஏதும் ஓடவில்லை. நான்காவது பந்தில் சிக்ஸ் அடித்து பெங்களூருவுக்கு நம்பிக்கை ஊட்டினார். இரண்டு பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் புவனேஸ்வர் குமாரின் சிறப்பான பந்துவீச்சால் டிவில்லியர்ஸால் ரன் ஏதும் எடுக்க முடியாமல் போனது. அதனால், ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: