• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கடைசி ஓவர் பரபரப்பு- பெங்களூருவை வீழ்த்தி ப்ளேஆப்பின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கொல்கத்தா

கடைசி ஓவர் பரபரப்பு- பெங்களூருவை வீழ்த்தி ப்ளேஆப்பின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கொல்கத்தா

கொல்கத்தா வீரர்கள்

கொல்கத்தா வீரர்கள்

பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொல்கத்தா அணி ப்ளே ஆப் சுற்றின் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் 2021 தொடரின் லீக் போட்டிகளில் டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நான்கு அணிகளும் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. முதல் இரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி, சென்னை அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்தநிலையில் இன்று பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 18 பந்துகளை எதிர்கொண்டிருந்த படிக்கல் 5-வது ஓவரில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி 49 ரன்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதனையடுத்து, அணியின் சரிவு தொடங்கியது.

    அதனையடுத்து, களமிறங்கிய ஸ்ரீகர் பரத் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, விராட் கோலி 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெங்களூரு 12 ஓவரில் 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கோலியைத் தொடர்ந்து ஏபி டிவில்லியர்ஸும் 11 ரன்னில் நரேன் பந்துவீச்சில் கோலியைப் போலவே ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லும் சுனில் நரேன் பந்துவீச்சில் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் பெங்களூரு அணி வீரர்கள் தடுமாறினர். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் 4 ஓவர்கள் வீசிய சுனில் நரேன் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஷூப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஷப்மன் கில் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திரிபாதி 6 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுபுறம் நிதானமாக ஆடிவந்த வெங்கடேஷ் ஐயர் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, நிதிஷ் ராணா 23 ரன்களும், சுனில் நரேன் 26 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இயான் மோர்கன், ஷகிப் அல் ஹசன் களத்தில் இருந்தனர். இறுதிஓவரை டேனியல் கிறிஸ்டியன் வீசினர்.

    அவருடைய முதல் பந்தை எதிர்கொண்ட ஹசன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து நெருக்கடியைக் கொடுத்தார். அதனையடுத்து, வந்த மூன்று பந்துகளுக்கு ஒவ்வொரு ரன்களாக எடுத்தார் மோர்கனும், ஹசனும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதன்மூலம் ப்ளேஆப் சுற்றின் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது கொல்கத்தா அணி. பெங்களூரு அணி ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: