• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ப்ராவோவின் நீண்டநாள் சாதனையை சமன் செய்த ஹர்ஷல் பட்டேல்- தோல்விக்கு மத்தியில் ஆர்.சி.பிக்கு கிடைத்த ஆறுதல்

ப்ராவோவின் நீண்டநாள் சாதனையை சமன் செய்த ஹர்ஷல் பட்டேல்- தோல்விக்கு மத்தியில் ஆர்.சி.பிக்கு கிடைத்த ஆறுதல்

ஹர்ஷல் பட்டேல்

ஹர்ஷல் பட்டேல்

ஒரு ஐ.பி.எல் சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்து டுவைன் ப்ராவோவின் சாதனையை ஹர்ஷல் பட்டேல் சமன் செய்துள்ளார்.

  • Share this:
    ஐ.பி.எல் 2021-ம் ஆண்டு தொடரின் எலிமினேட்டர் சுற்றின் முதல் போட்டியில் நேற்று பெங்களூரு அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் மோசமான பேட்டிங் காரணமாக அந்த தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. இந்தத் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகுவதால் பெங்களூரு அணியின் வீரர்கள் சோகமாக உள்ளனர். பெங்களூரு அணியால் இதுவரையில் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதும் அந்த அணி ரசிகர்களின் சோகத்துக்கு முக்கிய காரணம்.

    இருப்பினும், அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஹர்ஷல் பட்டேல் இந்தத் தொடரில் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஒரு ஐ.பி.எல் சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதில் சென்னை அணியின் வீரர் டுவைன் ப்ராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார். 2013-ம் ஆண்டு சென்னை அணிக்கு விளையாடிய ப்ராவோ அந்தத் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதுதான், இதுவரையில் ஐ.பி.எல் தொடரில் ஒரு பந்துவீச்சாளர் வீழ்த்திய அதிக விக்கெட்டுகளாக இருந்துவருகிறது. அதனை தற்போது ஹர்ஷல் பட்டேல் சமன் செய்துள்ளார்.

    இந்தத் தொடரில் 14 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்றைய போட்டியில் வெங்கடேஷ் ஐயர், ஷப்மன் கில் என்ற இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடரில் லீக் போட்டிகளின்போது மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் 17-வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார் ஹர்ஷல் பட்டேல். ஹர்திக் பாண்டியா, கைரன் பொல்லார்டு, ராகுல் சாஹர் என மூவரையும் அடுத்து விக்கெட் எடுத்து சாதனைப் படைத்தார். இந்தத் தொடரில் சிறப்பான பந்துவீச்சுகளால் பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவிய ஹர்ஷல் பட்டேல் ப்ராவோவுடன் சாதனையை பகிர்ந்துகொண்டுள்ளார்.

    ப்ராவோ, ஹர்ஷல் பட்டேல் விக்கெட்டுகளுக்கு அடுத்த நிலையில் 2020-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ககிசோ ரபாடா 30 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, 2011-ம் ஆண்டு தொடரில் 27 விக்கெட்டுகளை எடுத்து லசித் மலிங்கா மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: