• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த விராட் கோலி

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த விராட் கோலி

கோலி, மோர்கன்

கோலி, மோர்கன்

கொல்கத்தா அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் 2021 தொடரின் லீக் போட்டிகளில் டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நான்கு அணிகளும் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. முதல் இரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி, சென்னை அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. தோல்வியடைந்த டெல்லி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதவுள்ளது.

    இன்றைய எலிமினேட்டர் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன. பெங்களூருவைப் பொறுத்தமட்டில் கேப்டன் கோலி, தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல், மேக்ஸ்வெல், ஆகியோர் முழு ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் யஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் முக்கிய பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.

    கொல்கத்தாவைப் பொறுத்தவரை பேட்டிங்கில் வெங்கடேஷ் ஐயர், ஷூப்மன் கில், திரிபாதி ஆகியோர் முழு பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வீரர்களாக உள்ளனர். இந்தநிலையில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: