• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரேன்: 138 ரன்களுக்கு சுருண்ட பெங்களூரு அணி

4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரேன்: 138 ரன்களுக்கு சுருண்ட பெங்களூரு அணி

கொல்கத்தா வீரர்கள்

கொல்கத்தா வீரர்கள்

கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் 2021 தொடரின் லீக் போட்டிகளில் டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நான்கு அணிகளும் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. முதல் இரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி, சென்னை அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. தோல்வியடைந்த டெல்லி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதவுள்ளது.

    இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 18 பந்துகளை எதிர்கொண்டிருந்த படிக்கல் 5-வது ஓவரில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பெங்களூரு அணி 49 ரன்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதனையடுத்து, அணியின் சரிவு தொடங்கியது. அதனையடுத்து, களமிறங்கிய ஸ்ரீகர் பரத் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, விராட் கோலி 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெங்களூரு 12 ஓவரில் 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கோலியைத் தொடர்ந்து ஏபி டிவில்லியர்ஸும் 11 ரன்னில் நரேன் பந்துவீச்சில் கோலியைப் போலவே ஆட்டமிழந்தார்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லும் சுனில் நரேன் பந்துவீச்சில் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் பெங்களூரு அணி வீரர்கள் தடுமாறினர். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் 4 ஓவர்கள் வீசிய சுனில் நரேன் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: