கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான், மும்பை இந்தியன்ஸ் அணிகள் 8 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அட்டவணையில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. நேற்று ஆர்சிபி பவுலர் ஹர்ஷல் படேல் 17வது ஓவரில் ஹர்திக் பாண்டியா, போலார்டு, சாகர் ஆகியோர் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 57/0 லிருந்து மும்பை இந்தியன்ஸ் அடுத்த 54 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வி கண்டது.
இந்த வெற்றி குறித்து விராட் கோலி கூறும்போது பும்ராவை பாராட்டினார். படிக்கல், மேக்ஸ்வெல், ஏ.பி.டிவிலியர்ஸ் என்று மூன்று முக்கிய விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றினார். விராட் கோலி பார்முக்கு வந்து இரண்டாவது அரைசதத்தை தொடர்ச்சியாக அடித்தார் இதில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும். ஸ்ரீகர் பரத் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 32 ரன்களையும் கிளென் மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 56 ரன்களை பெரும்பாலும் இடது கையில் எடுத்தார் என்றே கூற வேண்டும். விராட் கோலி பும்ராவை புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்து டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த 5வது பேட்டர் ஆனார்.
விராட் கோலி கூறியதாவது: “மிக்க மகிழ்ச்சி, குறிப்பாக வெற்றி பெற்ற விதம் அபாரம். தேவ்தத்தை இழந்தது கடினமாகிப்போனது. 2வது ஓவரில் வந்து பும்ரா என்னை அவுட் ஆக்கப் பார்த்தார். கே.எஸ். பரத் இறங்கி சில அபாரமான ஷாட்களை ஆடினார். அவர் எனக்கிருந்த பிரஷரை நீக்கி விட்டார். மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் நம்ப முடியாத இன்னிங்ஸ்.
நாம் நம் ஆதிக்க மனோபாவத்தை காட்டவில்லை எனில் பும்ரா நம்மை ஏறி மிதித்து விடுவார், கொஞ்சம் விட்டால் நம்மை காலி செய்து விடுவார் பும்ரா. அவர் அப்படிப்பட்ட பவுலர். எனவே நாம் அவருக்கு எதிராக சிறப்பாக ஆடுவது அவசியம். 15 ரன்களைக் கூடுதலாகப் பெற்றிருக்க வேண்டும் விட்டு விட்டோம். ஹர்ஷல் படேல் பவுலிங் நம்ப முடியாதது, அசத்தி விட்டார்” என்றார் விராட் கோலி.
ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.
Also Read: CSK vs KKR IPL 2021: சில சமயங்களில் நன்றாக ஆடாமலேயே வெற்றி பெறுகிறோம்: தோனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Captain Virat Kohli, IPL 2021, RCB