• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கோலியின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் மைக்கேல் வான்

கோலியின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் மைக்கேல் வான்

விராட் கோலி

விராட் கோலி

140 போட்டிகளில் ஆர்சிபி கேப்டனாக இருந்த கோலி, 64 போட்டிகளில் வென்று 69-ல் தோற்றுள்ளார், தோல்விதான் அதிகம். 3 போட்டிகள் டை ஆகியுள்ளது. ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை இதனையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், கோலி ஆர்சிபியைப் பொறுத்தவரை ஒரு தோல்வி கேப்டன் என்று கூறியுள்ளர்.

  • Share this:
    140 போட்டிகளில் ஆர்சிபி கேப்டனாக இருந்த கோலி, 64 போட்டிகளில் வென்று 69-ல் தோற்றுள்ளார், தோல்விதான் அதிகம். 3 போட்டிகள் டை ஆகியுள்ளது. ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை இதனையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், கோலி ஆர்சிபியைப் பொறுத்தவரை ஒரு தோல்வி கேப்டன் என்று கூறியுள்ளர்.

    2011 ஐபிஎல் தொடரில் ரன்னர்களாக முடிந்தனர். சிஎஸ்கேவிடம் இறுதியில் தோல்வி. வெட்டோரி ஓய்வு அறிவித்தவுடன் 2013-ல் முழு நேர கேப்டன் ஆனார் விராட் கோலி. அந்த ஆண்டு ஆர்சிபி 5ம் இடத்தில் முடிந்தது. 2014-ல் 7ம் இடம். 2018-ல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றனர். 3ம் இடத்தில் முடிந்தது ஆர்சிபி. ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தினாலும் குவாலிபையர் 2-ல் சிஎஸ்கேவிடம் சரணடைந்தது. 2016-ல் கோலி தலைமையில் முதல் முறையாக ஐபிஎல் பைனலில் நுழைந்தது, ஆனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வி கண்டது, ரன்னர்களாக ஆர்சிபி முடிந்தது.

    அதன் பிறகு 207, 18, 19 ஆர்சிபிக்கு மோசமான சீசன்களாக அமைந்தது. இந்த மூன்று ஐபிஎல் தொடர்களிலும் முறையே 8,6,8 என்ற இடங்களில் முடிந்தனர். இது ரொம்ப மோசம், 2017 தொடரில் 3 போட்டிகளில்தான் வென்றனர். இந்நிலையில் கோலி கேப்டன்சியிலிருந்து இந்தத் தொடருடன் விலகுவதாக அறிவித்ததையடுத்து கோலி கேப்டன்சியில் தீராக்களங்கமாக ஆர்சிபி ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை என்பது வேதனையான விஷயமே.

    வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறும்போது, “ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக விராட் கோலி ஒரு ஐபிள் கோப்பையை கூட வென்றதில்லை. அதுவும் விராட் கோலி தனக்கென்றே நிர்ணயித்துக் கொண்ட தரநிலையில் கோப்பையை வெல்ல முடியாமல் போனது அவரது தோல்வியே.

    அவர் தோல்வி கேப்டன் என்று நான் கூறவில்லை, ஆனால் கோலி தன்னையே உள்நோக்கிப் பார்த்தால் ஆர்சிபியில் தான் ஒரு தோல்வி கேப்டன் என்பதை ஒப்புக் கொள்வார். இப்படிப்பட்ட உந்துதலான ஒரு வீரர், ஆக்ரோஷ கேப்டன் கையில் கோப்பை இல்லாதது வருத்தமே. மாறாக இந்திய அணியை வழிநடத்தும் போது டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள், டி20 என்று அபாரமான கேப்டனாகத் திகழ்கிறார், இந்திய அணியின் பிஸ்தா கேப்டன் தான் விராட் கோலி. ஆனால் ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் அந்த உயரத்தை அவர் எட்டவில்லை. தோல்வியடைந்து விட்டார்.

    கிளென் மேக்ஸ்வெல், கோலி, டிவில்லியர்ஸ், பரத் என்று பேட்டிங்கிலும் பவர் உள்ளது பவுலிங்கில் சஹல், ஹர்ஷல் படேல் போன்றோரை வைத்துக் கொண்டு கோப்பையை வெல்லாமல் போனது தோல்வியே.” என்கிறார் மைக்கேல் வான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: