• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs RCB IPL 2021 கோலி vs தோனி: நேருக்கு நேர் ரெக்கார்ட், அதிக ரன்கள்- முக்கிய விவரங்கள்

CSK vs RCB IPL 2021 கோலி vs தோனி: நேருக்கு நேர் ரெக்கார்ட், அதிக ரன்கள்- முக்கிய விவரங்கள்

தோனி - கோலி, ஆர்சிபி-சிஎஸ்கே இன்று மோதல் ஐபிஎல் 2021 ஷார்ஜா

தோனி - கோலி, ஆர்சிபி-சிஎஸ்கே இன்று மோதல் ஐபிஎல் 2021 ஷார்ஜா

வெள்ளிக்கிழமையான இன்று ஐபிஎல் 2021 தொடரின் 35வது போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸும் கோலி தலைமை ஆர்சிபி அணியும் மோதுகின்றன, இரு அணிகள் இதுவரை மோதிய போட்டிகள் விவரம், அதிக ரன்கள், வெற்றி விகிதம், அணி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இதோ.

  • Share this:
    வெள்ளிக்கிழமையான இன்று ஐபிஎல் 2021 தொடரின் 35வது போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸும் கோலி தலைமை ஆர்சிபி அணியும் மோதுகின்றன, இரு அணிகள் இதுவரை மோதிய போட்டிகள் விவரம், அதிக ரன்கள், வெற்றி விகிதம், அணி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இதோ.

    வீழ்ச்சியில் இருக்கும் ஆர்சிபி அணி இன்று 3 முறை ஐபிஎல் சாம்பியன், ஜாம்பவான் தோனி தலைமை சிஎஸ்கே அணியைச் சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெறுகிறது, சிறிய மைதானம், எனவே சரவெடிகளை எதிர்பார்க்கலாம். ஆட்டம் வழக்கம் போல் இன்று மாலை 7:30 மணிக்குத் தொடங்குகிறது. கொல்கத்தாவிடம் சிக்கி சின்னாபின்னமாகி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவிய நிலையில் இன்று இன்னொரு இமாலயம் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது ஆர்சிபி.

    மாறாக சிஎஸ்கே அணி எல்லோ ஆர்மி என்று கூறுவதற்கிணங்க கேப்டன் தோனியின் கீழ் அணி திரண்டு அன்று பிரமாதமாக மும்பையை வீழ்த்தி இன்னொரு பிளே ஆஃப் சுற்றுக்குத் தயாராகியுள்ளது.

    டாப் ஸ்கோரர்:

    கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2021-ன் ஆர்சிபி பேட்டிங்கில் முன்னிலை வகிக்கிறார்- ரன்கள் 8 போட்டிகளில் 233.

    சென்னை அணியில் ஃபாப் டுபிளெசிஸ் 8 போட்டிகளில் 320 ரன்களுடன் அந்த அணியில் முன்னிலை வகிக்கிறார்.

    நேருக்கு நேர்:

    பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் ஐபிஎல் தொடர்களில் இதுவரை 28முறை மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே கை ஓங்கி 18 முறை ஆர்சிபியை மண்ணைக்கவ்வச்செய்துள்ளது. ஆர்சிபி 9 போட்டிகளில் வெல்ல ஒரு போட்டி நோ-ரிசல்ட் ஆனது. கடைசியாக இரு அணிகளும் மோதிய போது ஐபிஎல் 2021-ல் பெங்களூரு அணியை சென்னை 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    ஆர்சிபி உத்தேச லெவன்: தேவ்தத் படிக்கல், கே.எஸ். பரத், விராட் கோலி, டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல், டிம் டேவிட், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், சஹல், முகமது சிராஜ், கைல் ஜேமிசன்.

    சிஎஸ்கே லெவன்: டுபிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, ராயுடு/உத்தப்பா, சாம் கரன், டிவைன் பிராவோ, தீபக் சாகர், ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    கடந்த 5 போட்டிகள் முடிவு:

    ஆர்சிபியை சிஎஸ்கே 69 ரன்களில் வீழ்த்தியது

    சென்னை ஆர்சிபியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது

    ஆர்சிபி சென்னை அணியை 37 ரன்களில் வென்றது.

    ஆர்சிபி சென்னையை ஒரு ரன்னில் வென்றது.

    சிஎஸ்கே ஆர்சிபியை 7 விக்கெட்டுகளில் வெற்றி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: