• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs RCB | பவர் ப்ளேவில் ஆர்சிபி அதிரடி சரவெடி... வெளுத்து வாங்கிய கோலி, படிக்கல்

CSK vs RCB | பவர் ப்ளேவில் ஆர்சிபி அதிரடி சரவெடி... வெளுத்து வாங்கிய கோலி, படிக்கல்

CSK vs RCB | பவர் ப்ளேவை அடுத்தும் ஆர்சிபி அதிரடியாக விளையாடி வருகிறது. கோலி, படிக்கல் இருவரும் அரைசதம் கடந்தனர்.

  • Share this:
    சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி ரன்குவிப்பில் ஈடுபட்டுள்ளது. பவர் ப்ளேவில் ஆர்சிபி விக்கெட் ஏதும் இழப்பின்றி விளையாடியது.

    ஐபிஎல் 2021 தொடரின் 35-வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியில் 2-வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியும், 3-வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சார்ஜா மைதானத்தில் ஏற்பட்ட மணல் புயல் காரணமாக டாஸ் போடுவது 30 நிமிடம் தாமதமானது.

    சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமில்லை. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய வீரர்களே இந்த போட்டியிலும் உள்ளனர். ஆர்சபி அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. சச்சின் பேபி மற்றும் கெய்ல் ஜேமிசனுக்கு பதிலாக நவ்தீப் சைனி, டிம் டேவிட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே இந்த ஜோடி சிஸ்கே பந்துவீச்சை பறக்கவிட்டனர். இன்றைய போட்டியில் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் சற்று ஆக்ரேஷமாகவே இருந்தது. ஆர்சிபி அணி பவர் ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது.

    பவர் ப்ளேவை அடுத்தும் ஆர்சிபி அதிரடியாக விளையாடி வருகிறது. கோலி, படிக்கல் இருவரும் அரைசதம் கடந்தனர். ஆர்பிசி 13 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி 111 ரன்கள் எடுத்துள்ளது. இன்றையப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு இமலாய இலக்கு நிர்ணயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: