• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நீல நிற புதிய ஜெர்சி: முன் களப் பணியாளர்கள், ஏழைகளுக்கு ஆர்சிபி அணி நிதியுதவி

நீல நிற புதிய ஜெர்சி: முன் களப் பணியாளர்கள், ஏழைகளுக்கு ஆர்சிபி அணி நிதியுதவி

நீல நிற உடையில் ஆர்சிபி.

நீல நிற உடையில் ஆர்சிபி.

ஆர்சிபி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர், பவுண்டரி, எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஸ்பான்ஸர்கள் அளிக்கும் வெகுமதி முன்களப் பணியாளர்களூக்கு வழங்கப்பட உள்ளது.

  • Share this:
    இது தொடர்பாக ஆர்சிபி அணி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நாங்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர், பவுண்டரி, வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் முன்களப் பணியாளர்களுக்கு ஸ்பான்ஸர்கள் நன்கொடை வழங்குவார்கள்” எனத் தெரிவித்துள்ளது. ஐபிஎல் டி20 போட்டியின் 14-வது சீசனின் 2-ம் பகுதி நேற்று தொடங்கியது. இன்று நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி மோதுகிறது. இந்த முறை ஆர்சிபி அணி தனது மனிதநேய பண்பை வெளிப்படுத்துவதற்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

    கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் டி20 போட்டியில் ஆர்சிபி அணி, பசுமைச் சூழலை வலியுறுத்தி பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்கி விளையாடுவார்கள், பூமியை வெப்பமயமாக்கலில் இருந்து காப்போம், ஆரோக்கியமாக வைத்திருப்போம் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக முன்களப்பணியாளர்களின் சேவை வியக்கத்தக்கது.

    ஐபிஎல் 14-வது சீசனின் 2-ம் பகுதியில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நீல நிற ஜெர்ஸியை அணிந்து ஆர்சிபி வீரர்கள் இன்று களமிறங்குகின்றனர். வீரர்கள் அணிந்து விளையாடிய நீல நிற ஜெர்ஸி பின்னர் ரசிகர்களிடம் ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகை ஏழைகளுக்கும், விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த உதவியாக வழங்கப்பட உள்ளது.

    அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர், பவுண்டரி, எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஸ்பான்ஸர்கள் அளிக்கும் வெகுமதி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: