Home /News /sports /

சி.எஸ்.கே அபார பந்துவீச்சு... 146 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயத்தது பெங்களூரு

சி.எஸ்.கே அபார பந்துவீச்சு... 146 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயத்தது பெங்களூரு

ஐ,பி.எல் 2020

ஐ,பி.எல் 2020

IPL 2020 | பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்களான கோலி - டி-வில்லியர்ஸ் ஜோடி இந்தப் போட்டியிலும் சிறப்பாக பார்ட்டனர்ஷிப் அமைத்து விளையாடினர்.

    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரன்குவிக்க தடுமாறிய பெங்களூரு அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    ஐ.பி.எல் 2020 தொடரின் 44-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இதை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய படிகல் 22 ரன்னிலும், ஃபின்ச் 15 ரன்னிலும் களமிறங்கினார். ஆனால் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்களான கோலி - டி-வில்லியர்ஸ் ஜோடி இந்தப் போட்டியிலும் சிறப்பாக பார்ட்டனர்ஷிப் அமைத்து விளையாடினர்.

    ஆனால் ரன்ரேட்டை சி.எஸ்.கே அணி கட்டுக்குள் வைத்திருந்தது. டி-வில்லியர்ஸ் 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தீபக் சாஹர் பந்துவீச்சில் அவுட்டானார். இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய சி.எஸ்.கே பவுலர்கள் பெங்களூரு அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார்கள். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே அணி விளைாயடி வருகிறது.















    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published:

    Tags: IPL 2020

    அடுத்த செய்தி