மோர்கன் ஸ்மார்ட் மூவ்.. பவர்ப்ளேயில் வீழ்ந்த விராட் கோலி - மிரட்டிய வருண் சக்கரவர்த்தி

மோர்கன் ஸ்மார்ட் மூவ்.. பவர்ப்ளேயில் வீழ்ந்த விராட் கோலி - மிரட்டிய வருண் சக்கரவர்த்தி

விராட் கோலி

வருண் தனது முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை அள்ளினார்.

 • Share this:
  நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  விராட் கோலி , படிக்கல் இருவரும் களமிறங்கினர். ஹர்பஜன் சிங் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஃப்ரீ ஹிட்டில் ஒரு பவுண்டரி மட்டுமே கிடைத்தது. ஆர்.சி.பிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

  வருண் சக்கரவர்த்தி வீசிய இரண்டாவது ஓவரில் கோலி தூக்கி அடிக்க முற்பட்டு ராகுல் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனையடுத்து ரஜத் பட்டிதார் களமிறங்கினார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை ஆடிய பட்டிதார் மீது கோலி நம்பிக்கை வைத்திருந்தார்.

  இந்நிலையில் வருண் சக்கரவர்த்தியின் கடைசி பந்தில் ரஜத் பட்டிதார் க்ளீன் போல்டானார். வருண் தனது முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை அள்ளினார். இதனையடுத்து மேக்ஸ்வெல் களமிறங்கினார். மூன்றாவது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார்.நான்காவது ஓவரை ஷகிப் அல் ஹசன்.  4 ஓவர் முடிவில் 2விக்கெட்டுக்கு 19 ரன்களை ஆர்.சி.பி எடுத்தது.  5-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். 6- வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். இந்த ஓவரில் மேக்ஸ்வெல் சிக்ஸர், பவுண்டரியுமாக விளாசினார். ஆர்.சி.பி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு  45 ரன்கள் எடுத்தது.
  Published by:Ramprasath H
  First published: