Home /News /sports /

IPL 2022 : இப்படியெல்லாம் ஒரு கேப்டன் இருக்க முடியுமா?- நான் நிச்சயமா தோனி இல்லை- டுபிளெசிஸ்

IPL 2022 : இப்படியெல்லாம் ஒரு கேப்டன் இருக்க முடியுமா?- நான் நிச்சயமா தோனி இல்லை- டுபிளெசிஸ்

டுபிளெசிஸ்- தோனி

டுபிளெசிஸ்- தோனி

2022 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தனது புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸை நியமிப்பதாக சனிக்கிழமை அறிவித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனை ஆர்சிபி வாங்கியது; 2011-2021 வரை 9 சீசன்களில் சிஎஸ்கே-யை பிரதிநிதித்துவப்படுத்திய பிறகு ஃபாஃப் RCB-க்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் பட்டம் வென்ற சீசனில் அவர் பேட்டிங்கில் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் படிக்கவும் ...

    RCB உடனான ஒரு நேர்காணலில், தோனியின் கீழ் விளையாடுவது பற்றி விரிவாகப் பேசிய பிறகு, CSK இல் தனது ஆரம்ப நாட்களை டுபிளெசிஸ் நினைவு கூர்ந்தார். 2011ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தபோது, ​​கேப்டன் பதவியிலும் கூட, தனக்கு இது ஒரு புதிய கலாச்சாரம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில், தனது தலைமைத்துவ பாணியை கொண்டு வருவேன் என்றும், விராட் கோலியாக இருக்க முயற்சிக்க முடியாது என்றும் கூறினார்.”

    டுபிளெசிஸ் கூறும்போது, “பைத்தியக்காரத்தனமான விஷயம் என்னவென்றால், நான் சென்னையில் தொடங்கும் போது, ​​கேப்டன்சி எப்படி இருக்கும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. மேலும் எம்எஸ் தோனியின் பாணி நான் நினைத்ததற்கு முற்றிலும் எதிரானது! ஏனென்றால் தென் ஆப்பிரிகாவின் கேப்டன்சி முறைதான் எனக்குத் தெரியும். இல்லையா? எனவே நான் இந்த சூழலுக்கு வந்தேன், 'தோனியின் கேப்டன்சி எப்படி இருக்க வேண்டுமோ அப்படியில்லாமல் நான் நினைத்ததற்கு மாறுபாடாக இருந்தது.

    சிஎஸ்கே எனக்குக் கற்பித்தது என்னவென்றால், வெவ்வேறு பாணி கேப்டன்சிகள் உண்டு என்பதையே. ஆனால் நீங்கள் உங்கள் சொந்த பாணியாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், அழுத்தம் இருக்கும் போது அதுதான் வரும். அதனால், என்னால் விராட் கோலியாக இருக்க முயற்சிக்க முடியாது, ஏனென்றால் நான் விராட் கோலி இல்லை. எம்எஸ் தோனியாக இருக்க என்னால் முடியாது. ஆனால் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எனது தலைமைத்துவ பாணியை வளர்க்கவும் முதிர்ச்சியடையவும் உதவியது. எனவே, அந்த பயணத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    மார்ச் 27ம் தேதியன்று ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தன் முதல் போட்டியில் ஆடுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, Faf du Plessis, IPL 2022, RCB, Virat Kohli

    அடுத்த செய்தி