Home /News /sports /

தோனியைக் கேலி செய்து ட்வீட் போடுவதா?- கேகேஆர் ட்வீட் குறித்து ஜடேஜா பதிலடி

தோனியைக் கேலி செய்து ட்வீட் போடுவதா?- கேகேஆர் ட்வீட் குறித்து ஜடேஜா பதிலடி

ரவிந்திர ஜடேஜா - டோனி

ரவிந்திர ஜடேஜா - டோனி

ஆஷஸ் தொடர் 4வது டெஸ்டுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையன்று, தோனிக்காக கெளதம் கம்பீர் ஆக்ரோஷமாக களவியூகம் அமைத்தது தொடர்பான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சமூக ஊடகப் பதிவில் தோனியை கேலி செய்யும் விதமாக பதிவிட்டிருப்பதை ரவீந்திர ஜடேஜா கண்டித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்காக கெளதம் கம்பீர் அமைத்த ஆக்ரோஷமான களம் குறித்து எம்எஸ் தோனியை கேலி செய்யுமாறு பதிவிட்ட , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார். ஜடேஜாவின் பதிலடி ட்வீட் இதோ:



ஆஷஸ் தொடர் 4வது டெஸ்ட் 5ம் நாள் ஆட்டத்தின் 4-வது இன்னிங்சில் 102 ஓவர்களுக்கு பேட்டிங் செய்த இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிளீன் ஸ்வீப் வெற்றியை சிட்னியில் இன்று முறியடித்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 101 முறை நாட்-அவுட்டாக இருந்துள்ளார். அவர் இன்று இறுதியில் ஸ்டீவ் ஸ்மித் வீசிய ஓவரில் பேட் செய்தார் அந்த ஓவரில் ஆட்டமிழக்காமல் பிரமாதமாக தடுத்தாடி ஆட்டத்தை டிரா செய்தார்.

இந்த ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் கடைசி 10 ஓவர்களில் டெய்ல் எண்டர்கள் ஆட ஆஸ்திரேலியா பேட்டரைச்சுற்றி ஒரு தாக்குதல் களவியூகத்தை அமைத்தது மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு பீல்டரையும் பேட்டரைச் சுற்றி நெருக்கமாகக் கொண்டு வந்தது. கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு ஃபீல்டரை சில்லி பாயிண்ட், ஃபார்வர்ட் ஷார்ட் லெக், ஸ்லிப்ஸ் மற்றும் லெக் ஸ்லிப்பில் நிறுத்தினார். ஆட்டத்தின் இறுதி சிலமணித்துளிகள் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது.

ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கமின்ஸின் இந்த களவியூகம் ஐபிஎல் 2016 தொடரில் கொல்கத்தா அணி அதிரடி வீரர் தல தோனிக்கு எதிராக கௌதம் கம்பீர் செய்த மாஸ்டர் ஸ்ட்ரோக்கை நினைவுபடுத்துவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளது. தோனி அந்தக் களவியூகத்தை முறியடிக்கவில்லை, 22 பந்துகளில் 8 ரன்களையே எடுத்தார். கொல்கத்தா போட்டியை வென்றது. பெரிய ஹிட்டர் என்று நம்பப்படும் தோனியை சுற்றி பீல்டர்களை நிறுத்தி கம்பீர் தோனி ஒரு ஹிட்டர் என்ற பார்வையை தகர்த்தார.

இதற்கு அந்த ட்வீட்டுக்கு பதில் அளித்த ஜடேஜா, “அது கம்பீரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் அல்ல, வெறும் ஷோ பீஸ்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Published by:Muthukumar
First published:

Tags: Dhoni, Gautam Gambhir, IPL 2022, Ravindra jadeja

அடுத்த செய்தி