ஜடேஜாவுக்கு ‘இங்கிலிஷ்’ தெரியாது: சர்ச்சை மஞ்சுரேக்கரின் ‘திமிரை’ அம்பலப்படுத்திய நெட்டிசன்

ஜடேஜா

“நீங்கள் வருந்தத் தக்க ஒரு நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் வீரர்களை வழிபாடு செய்வது போல் நான் செய்ய முடியாது, நான் பகுத்துப் பார்க்கக் கூடியவன். ஜடேஜாவுக்கு இங்கிலிஷ் தெரியாது, அதனால்தான் பிட்ஸ் அண்ட் பீசஸ் என்ற வார்த்தைக்கு அவர் அர்த்தம் தெரியாமல் பேசியுள்ளார்- சஞ்சய் மஞ்சுரேக்கர்

  • Share this:
    ஜடேஜாவுக்கு இங்கிலிஷ் தெரியாது என்று நெட்டிசன் ஒருவருடன் மேற்கொண்ட தனிப்பட்ட உரையாடலில் சர்ச்சை புகழ் சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறிய கருத்தை நெட்டிசன் ஒருவர் அம்பலப்படுத்தியதில் மீண்டும் சஞ்சய் மஞ்சுரேக்கர் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

    இந்த உரையாடலில் ஜடேஜாவுக்கு இங்கிலிஷ் தெரியாது அதனால்தான் நான் என்ன சொன்னேன் என்று புரியாமல் அவர் பதில் கொடுத்துள்ளார் என்று மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.

    Also Read: இந்தியர்களை கேலி செய்து பதிவு- நிறவெறி சர்ச்சையில் சிக்கிய இயான் மோர்கன், ஜாஸ் பட்லர்

    2019 உலகக்கோப்பை போட்டித் தொடரின் போது ஜடேஜாவை ‘துண்டு துணுக்கு’ வீரர் தொடர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது என்ற ரீதியில் கருத்தைக் கூற அதை ஜடேஜா கடுமையாக விமர்சித்து, “ஆனாலும் உங்களை விட இருமடங்கு போட்டிகளில் ஆடிவிட்டேன் இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறேன். சாதித்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வார்த்தை கழிசல்கள் போதும் நிப்பாட்டுங்கள்” என்று சாடினார் ஜடேஜா.

    Also Read: Dhoni | ஜடேஜாவுக்கும் ரஷீத் கானுக்கும் தோனி அளித்த ‘பீல்டிங்’ அட்வைஸ் சரியா? - ரஷீத் கான் கூறுவது என்ன?

    இப்போது ட்விட்டர் பயனாளி ஒருவர் சஞ்சய் மஞ்சுரேக்கருடன் தான் நடத்திய தனிப்பட்ட உரையாடலை தொகுத்துக் கொடுத்துள்ளார். அந்தப் பயனாளி தன் பதிவில், “தனிப்பட்ட உரையாடலை நான் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்றுதான் விரும்பினேன். ஆனால் என்னால் முடியவில்லை, காரணம் இந்த மனிதரின் (மஞ்சுரேக்கரின்) இன்னொரு அசிங்கமான பக்கத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இவரை உங்கள் வர்ணனையில் வைத்திருக்கப் போகிறீர்களா பிசிசிஐ?” என்று கேட்டு பதிவிட்டுள்ளார்.

    அந்த உரையாடலில் மஞ்சுரேக்கர் இந்தப் பயனாளிக்கு பதில் அளிக்கையில், “நீங்கள் வருந்தத் தக்க ஒரு நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் வீரர்களை வழிபாடு செய்வது போல் நான் செய்ய முடியாது, நான் பகுத்துப் பார்க்கக் கூடியவன். ஜடேஜாவுக்கு இங்கிலிஷ் தெரியாது, அதனால்தான் பிட்ஸ் அண்ட் பீசஸ் என்ற வார்த்தைக்கு அவர் அர்த்தம் தெரியாமல் பேசியுள்ளார். அவர் பயன்படுத்திய ‘வெர்பல் டயரியா’ என்ற வார்த்தையைக் கூட அவருக்காக வேறு யாராவது சொல்லிக் கொடுத்திருப்பார்கள்” என்று கூறியுள்ளார் மஞ்சுரேக்கர்.

    இந்த உரையாடலை இவர் அம்பலப்படுத்த மீண்டும் நெட்டிசன்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் மஞ்சுரேக்கர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அஸ்வினைப் போய் ஆல் டைம் கிரேட் லிஸ்ட்டில் சேர்க்க முடியாது என்று கூறி சிக்கிக் கொண்டார். அஸ்வின் அதற்கு அன்னியன் பட விவேக், விக்ரம் டயலாக்கை மீம் ஆக பதிவிட்டு கிண்டலடித்தார்.

    அதற்கும் பதிலடி கொடுத்த சஞ்சய் மஞ்சுரேக்கர் சண்டைக்கோழியாக மாறிவிட்டாரோ என்று தோன்றுகிறது. இன்னொன்றும் கூற வேண்டும், யாராவது எதையாவது விமர்சனம் செய்தால் அது அவரது கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை என்று விட்டு விடாமல் அவரைப் போட்டு பந்தாடும் சகிப்பின்மையின் உச்சத்தில் சமூக ஊடகதாரர்கள் இருப்பதும் ஆரோக்கியமானதல்ல.
    Published by:Muthukumar
    First published: